"டியர்".. விடிந்தால் தேர்தல்.. கனிமொழிக்கு குஷ்பு சொன்ன "சூப்பர்" ஆறுதல்.. பரபரக்கும் களம்
திமுக எம்பி கனிமொழிக்கு பாஜகவின் குஷ்பு வாழ்த்து கூறியுள்ளார்
சென்னை: நாளைக்கு காலையில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கனிமொழிக்கு ஒரு ட்வீட் போட்டுள்ளார் பாஜகவின் குஷ்பு.. அந்த ட்வீட்தான் வைரலாகி வருகிறது.
இந்த முறை திமுக எம்பி கனிமொழி தீவிரமான பிரச்சாரத்தை ஆரம்பத்தில் இருந்தே முன்னெடுத்து வந்தார்.. நம்ம ஊரில் ஸ்டாலின், கிராம சபை போன்ற கூட்டங்களை தமிழகம் முழுக்க சென்று நடத்தி வந்தார்.. அத்துடன், தேர்தல் தேதி நெருங்க நெருங்க, கனிமொழியின் பிரச்சாரமும் சூடுபிடித்தது.
இந்த சமயத்தில்தான் தமிழகத்தில் கொரோனா தாக்கமும் அதிகமானது.. இதில் கனிமொழியும் பாதிக்கப்பட்டுள்ளார்.. தற்போது, சென்னையில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் தன்னை அனுமதித்துக் கொண்டார்.. இதையடுத்து, கனிமொழியின் அனைத்து பிரச்சாரக் கூட்டங்களும் ரத்தாகின.

ட்வீட்
இந்நிலையில், கனிமொழி ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அதில், "எனக்கு கோவிட்- 19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். மருத்துவமனையில் எனக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகின்றன. எனது உடல் நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!" என்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார்.

வாழ்த்து
கனிமொழியின் இந்த ட்வீட்டை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.. கனிமொழி எப்படி இருக்கிறாரோ என்ற கவலையில் இருந்தவர்களுக்கு இந்த ட்வீட் தெம்பை தந்து வருகிறது.. கனிமொழியின் இந்த ட்வீட்டை குஷ்புவும் கவனித்துள்ளார்.. இதையடுத்து, அவரும் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. விரைவில் குணம் பெற்று வர வேண்டும் டியர் என்று பதிவிட்டுள்ளார் குஷ்பு.. அத்துடன் ஒரு ஹார்ட்டின் பதிவிட்டுள்ளார்.

கனிமொழி
குஷ்புவின் இந்த ஒத்த வரி ட்வீட்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.. கனிமொழியாகட்டும், குஷ்புவாகட்டும்.. 2 பேருமே தமிழகத்தின் பிரபலமான அரசியல்வாதிகள்.. இருவருமே துணிச்சல் வாய்ந்தவர்கள்.. இருவருமே பல விமர்சனங்களை எதிர்கொண்டுதான் இன்றைக்கு தங்களை அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர். இதில் கனிமொழி சீனியர் என்றாலும், தமிழகத்துக்கு பிரச்சனைக்குரிய விஷயங்கள் முதற்கொண்டு, எந்த பெண்ணையும் இழிவுபடுத்திடக்கூடாது என்ற ரீதியில் இவர்கள் அனைத்தையும் அணுகி வருவது பாராட்டுக்குரியது..

பாஜக
இப்போது குஷ்பு, திமுகவின் கோட்டையான ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டாலும், நாளைக்கு காலையில் தேர்தல் உள்ள நிலையில், கனிமொழிக்கு வாழ்த்து சொன்ன விதம் அருமை.. அரசியல் நாகரீகத்தை இந்த பெண் தலைவர்கள் தொடர்ந்து நிலைநாட்டி வரும் விதமும் அருமை... அந்த வகையில், குஷ்பு, கனிமொழி போன்ற தலைவர்கள் எந்த காலத்திலும் இந்த தமிழகத்துக்கு தேவையானவர்களே..!
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications