Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணா பல்கலை விவகாரம்! மன்னிப்பு கேட்க தவறினால்.. பாஜக அண்ணாமலைக்கு பறந்த வக்கீல் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தொடர்புப்படுத்தி பேசியதற்காக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் அண்ணாமலைக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடர நேரிடும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் வைத்து கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள், தண்டனை குறைப்பு அல்லாத ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

bjp-leader-annamalai-served-legal-notice-by-ex-pro-lawyer-seeking-50-lakh-in-defamation-damages

அண்ணாமலை வைத்த குற்றச்சாடு

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, குற்றவாளி ஞானசேகரனுக்கு அந்த பகுதியில் வசித்து வந்த கோட்டூர் சண்முகம் என்பவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், கோட்டூர் சண்முகம் அண்ணா பல்கலைக் கழத்தின் முன்னாள் பிஆர்ஓவாக இருந்த நடராஜனுக்கும் நெருங்கிய நண்பர் என்றும் தெரிவித்தார்.

பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த காலக்கட்டத்தில் ஞானசேகரன் கோட்டூர் சண்முகத்துடன் செல்போனில் பேசியதாகவும், இதையடுத்து கோட்டூர் சண்முகம் நடராஜனிடம் பேசி பல்கலைக்கழகத்தில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சியை அழித்ததாக கூறினார்.

ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள நிலையில் அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டு தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக நடராஜன் கூறியிருக்கிறார். மேலும் அண்ணாமலை இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.50 லட்சம் மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி பேசியது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லையெனில், அண்ணாமலை மீது வழக்கு தொடர நேரிடும் என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பிஆர்ஓ நடராஜன் கூறியதாவது:-

எனது தம்பியின் நண்பர்

கடந்த 3 ஆம் தேதி பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேட்டி ஒன்றை அளித்தார். அதில், கோட்டூர் சண்முகம் என்பவரிடம் நான் பேசியதாகவும் நாங்கள் ஞானசேகரனை பாலியல் வழக்கிலிருந்து காப்பாற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கும் சிசிடிவி கேமரா ரெக்கார்டிங் அழிக்க கூட்டு சதி செய்ததாகவும் கூறியுள்ளார். இது முற்றிலும் கண்டிக்கத்தக்க ஒரு செயல்.

முழுக்க முழுக்க பொய்யான தகவல். கோட்டூர் சண்முகம் என்பவர் எனக்கும், மறைந்த எனது உடன் பிறந்த தம்பிக்கு 30 வருடங்களாக தெரிந்த ஒரு நபர். எனது தம்பியின் நண்பர் தான் கோட்டூர் சண்முகம். எனது தம்பி கடந்த 16 .12. 2024 அன்று காலமானார். இதைத்தொடர்ந்து 11 ஆம் நாள் சடங்குகள் செய்வதற்காக எங்கள் குடும்பத்திற்கு கோட்டூர் சண்முகம் உதவினார். அந்த உதவிக்காக தான் நான்16.12.24 இருந்து 26.12.24 வரை தொலைபேசியில் பேசியுள்ளேன்.

ஒரு முறை கூட பேசவில்லை

இருவரும் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு தொடர்பாக ஒரு முறை கூட பேசவில்லை.
ஆகவே இதுபோன்ற ஒரு பொய்யான தகவலை ஊடகம் மற்றும் பத்திரிகைகளில் தெரிவித்து அதன் மூலம் மக்களுக்கு என்னைப் பற்றி ஒரு தவறான அவிப்பிராயத்தை உண்டாக்கிய அண்ணாமலை மீது நஷ்ட ஈடாக ரூபாய் 50 லட்சம் கேட்டு என்னுடைய வழக்கறிஞர் சுகாசினி நோட்டீஸ் இன்று அனுப்பியுள்ளார்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+