"அவர்" போட்டோ எங்கே.. ஏதோ திமுகவின் கட்சி நிகழ்ச்சி மாதிரி இருக்கே?.. கொந்தளிக்கும் எச்.ராஜா

திமுக அரசை எச் ராஜா விமர்சித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: " தடுப்பூசி முகாம்களில் அது ஏதோ திமுகவின் கட்சி நிகழ்ச்சி போல் பதாகை வைத்துள்ளது நேர்மையற்ற செயலாகும்" என்று தமிழக அரசுக்கு பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளர்.

தமிழ்நாட்டில் இதுவரை 18 வயதுக்கும் மேற்பட்ட 3 கோடியே 74 லட்சத்து 8 ஆயிரத்து 989 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது...

மேலும் 3 வது அலை வரப்போவதாக எச்சரிக்கைகள் வந்து 3வது அலை முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

 திமுக அரசு

திமுக அரசு

எனவே, தமிழ்நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்புசி முகாம் நடந்தது.. இதற்காகவே, மாநிலம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 40 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, கேரள மாநில எல்லையையொட்டிய கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் நோக்கத்தில் அதிகளவில் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தடுப்பூசிகள்

தடுப்பூசிகள்


இந்த மெகா தடுப்பூசி முகாமுக்காக இன்று சென்னையில் மட்டும் 1,600 முகாம்கள் செயல்பட்டு ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.. விநாயகர் சதுர்த்தி, இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்று அடுத்தடுத்து தொடர் விடுமுறை இருந்ததால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவார்களா என்ற கேள்வி இருந்து வந்த நிலையில், மக்கள் பலரும் திரண்டு வந்து, தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர்.

 தமிழக அரசு

தமிழக அரசு

இந்த முகாம் மூலம் ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகளை செலுத்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டும் வருகிறது... அதேசமயம், மெகா தடுப்பூசி முகாம்களில் தமிழக அரசின் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.. இந்த பேனர்கள் பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது... சிவகங்கையில் நடந்த தடுப்பூசி முகாமில் வைக்கப்பட்டுள்ள முகாமில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் போட்டோவை மட்டும் போட்டு, பேனர் வைக்கப்பட்டுள்ளது.

திமுக

திமுக

இந்த பேனருக்குதான் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்.. "கொரோனா தடுப்பூசி முழுமையாக மத்திய அரசு இலவசமாக தரும் சூழ்நிலையில் தடுப்பூசி முகாம்களில் அது ஏதோ திமுகவின் கட்சி நிகழ்ச்சி போல் பதாகை வைத்துள்ளது நேர்மையற்ற செயலாகும்.பாரத பிரதமரின் படமும் அது முழுமையாக மத்திய அரசு இலவசமாக வழங்கும் திட்டம் என்கிற விவரம் பதாகையில் இடம் பெற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

கமெண்ட்கள்

கமெண்ட்கள்

அத்துடன், பேனரின் போட்டோவையும் தன்னுடைய ட்வீட்டில் பதிவிட்டுள்ளார் எச்.ராஜா... இந்த ட்வீட்டுக்கு எதிர்ப்பும், ஆதரவும் என மாறி மாறி கமெண்ட்கள் குவிகின்றன.. அதில் ஒருவர், "சரி ஸ்டாலின் கூட முதல்வர், எதுக்கு கருணாநிதி படம் ?" என்று கேட்டுள்ளார்.. இன்னொருத்தரோ, "யாரு சார் இலவசமா கொடுக்குறது? எல்லாம் நாங்க பெட்ரோல் டீசல் போடும் காசு... முதல்ல இந்த இலவசமா கொடுக்கிறோம் என்ற உருட்டலை நிறுத்துங்க. உங்க சொந்த பணத்தை செலவு செய்து இலவசம் என்று சொல்லிக்கொள்ளுங்கள்" என்று பதிலளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+