உதயநிதியை பார்த்தீங்களா.. எவ்வளவு பவ்யமா இருந்தாரு.. இப்போ ஏன் இப்படி? குஷ்பு காட்டம்
தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசத்தில் தமிழக அரசு தலையிடுவது இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று குஷ்பு கூறியுள்ளார்.
சென்னை: தேர்தல் நேரத்தில் மட்டும் திமுக இந்துக்களை சந்தோசப்படுத்த திமுக அனைத்து வேலைகளையும் செய்கிறது என்று குஷ்பு கூறியுள்ளார். கோவில்களில், பூஜைகளில் திமுக குடும்ப உறுப்பினர்கள் போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும் படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புகிறார்கள். வெற்றி பெற்றவுடன் இந்துக்களின் பாரம்பரியத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
தருமபுரம் ஆதீனத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் பட்டின பிரவேசம் பல்லக்கு சேவை பழக்கத்திற்கு திராவிடர் கழகம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்ததை அடுத்து, இம்மாதம் இறுதியில் நடைபெறும் பட்டின பிரவேசத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தடைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். "தருமபுரம் பட்டினப் பிரவேசத்தை உயிரை கொடுத்தாவது நடத்துவோம்'' என்று மதுரை ஆதினம் தெரிவித்திருக்கிறார்.

பல்லக்கு சேவைக்கு ஆதரவு
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும், ''தருமபுரம் பட்டினப் பிரவேசத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்'' என்று சட்டசபையில் பேசியிருக்கிறார். தமிழக அரசு பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்தால் பாஜக அதை நடத்த தயாராக இருக்கிறது . ஆதினத்தை தோளில் சுமக்க நானே நேரில் செல்வேன் என்று அரசுக்கு சவால் விடுத்து இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

குஷ்பு காட்டம்
பட்டின பிரவேசம் நிகழ்ச்சியில் தமிழக அரசு தலையிடுவது இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பதிவில்,தேர்தல் நேரத்தில் மட்டும் திமுக இந்துக்களை சந்தோசப்படுத்த அனைத்து வேலைகளையும் செய்கிறது. கோவில்களில், பூஜைகளில் திமுக குடும்ப உறுப்பினர்கள் போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும் படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புகிறார்கள். வெற்றி பெற்றவுடன் இந்துக்களின் பாரம்பரியத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள்'' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்
விடியலை நோக்கி, ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பிரச்சார பயணத்தின் ஒருபகுதியாக மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது 27-வது குருமகா சந்நிதானம் உதயநிதி ஸ்டாலினுக்கு திருநீறு பூசி ஆசி வழங்கினார். தொடர்ந்து, தமிழ்க்கடவுள் சேயோன் என்ற மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை தொகுத்தளித்த நூலினை தருமபுரம் ஆதீனம் வெளியிட உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

ஆதீன மடத்தில் கருணாநிதி
1972ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீன கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டின்போது தருமபுரம் ஆதீனமடத்தில் கலைஞர் மு.கருணாநிதி தருமபுரம் ஆதீனம் 26 வது குருமகா சந்நிதானத்தை சந்தித்து ஆசிபெற்ற புகைப்படத்தை நினைவு பரிசாக உதயநிதி ஸ்டாலினுக்கு 27 வது குருமகாசன்னிதானம் வழங்கினார். அப்போது 26-வது குருமகா சந்நிதானம் முக்தியடைந்து ஓராண்டு நிறைவடைவதைத் தொடர்ந்து வெளியிடப்பட உள்ள குருபூஜை மலருக்கான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தியை உதயநிதி ஸ்டாலின் குருமகா சந்திதானத்திடம் வழங்கி ஆசி பெற்றார். அந்த போட்டோக்கள் அப்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த புகைப்படங்களை தற்போது எடுத்துக்காட்சி கேள்வி எழுப்பியுள்ளார் குஷ்பு.












Click it and Unblock the Notifications