Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜாதியை ஒழிப்பது என்பது பகல் கனவே..ஜாதியை மறைக்க தேவையில்லை! பாஜக நாராயணன் திருப்பதி என்ன சொல்கிறார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தம்முடைய சொந்த ஜாதி எது என தெரியாதவர்கள் எல்லாம் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுவதா? என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக லோக்சபாவில் பாஜக எம்பி அனுராக் தாக்கூர் விமர்சித்திருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், ஜாதியை மறைக்க தேவையில்லை, அரசியல் கலக்காமல் இருந்தாலே போதுமானது என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதங்களின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு ஏன் இடம்பெறவில்லை என்றார். பட்ஜெட் அல்வா தயாரிப்பில் கூட ஓபிசி பிரதிநிதிகள் அதிகம் இல்லை என்றார்.

Narayanan Tirupati BJP Caste

இதற்கு,"தம்முடைய சொந்த ஜாதி எது என தெரியாதவர்கள் எல்லாம் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுவதா? என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக லோக்சபாவில் பாஜக எம்பி அனுராக் தாக்கூர் விமர்சித்திருந்தார்.

அனுராக் தாக்கூரின் இந்தப் பேச்சை பாராட்டி தமது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல தரப்பைச் சேர்ந்தவர்களும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதுதொடர்பாக பேசிய திமுக எம்பி கனிமொழி,"இந்த அவையில் இருக்கக்கூடிய ஒரு உறுப்பினர் மற்றொரு உறுப்பினரை பார்த்து, உங்கள் சாதி என்னெவென்று உங்களுக்கு தெரியாது என்று பேசுகிறார். இதை பிரதமர் பாராட்டுகிறார். சாதியை தெரிந்து கொள்வதில் அப்படி என்ன பெருமை இருக்கிறது. சாதி அற்றவராக வாழ்வதில்தான் பெருமை இருக்கிறது. திராவிட இயக்கத்தின் கொள்கை இதுதான்." என பேசினார்.

இந்நிலையில் ஜாதியை மறைக்க தேவையில்லை, அரசியல் கலக்காமல் இருந்தாலே போதுமானது என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"அந்த ஜாதியை சேர்ந்தவர் எங்கே? இந்த ஜாதியை சேர்ந்தவர் எங்கே? என்று கேட்ட ராகுல் காந்தியிடம் நீங்கள் எந்த ஜாதி? என்று அனுராக் தாகூர் கேட்டதும் கோபம் கொந்தளித்தது வேடிக்கை. ஜாதி ரீதியான இடஒதுக்கீடு இந்தியாவை பிளக்கும் என்று கூறியவர் காங்கிரஸ் தலைவர் ராஜிவ் காந்தி என்று அவரின் மகன் ராகுலுக்கு தெரியுமா?

இந்தியா ஜாதி ரீதியாக கட்டமைக்கப்பட்டிருப்பதால் தான் ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு அமலில் இருக்கிறது என்பதை பலர் புரிந்து கொள்வதில்லை. ஜாதி எப்போது தோன்றியது என்பதும், யாரால் புகுத்தப்பட்டது என்பதெல்லாம் விவாதத்திற்குரியவை. வேதங்களிலோ, புராணங்களிலோ ஜாதி குறிப்பிடவில்லை என்பதே உண்மை. தற்போதைய ஜாதிய அமைப்பு என்பது 300-400 வருடங்களுக்குட்பட்டது தான் என்பதை வரலாறு சொல்லும்.

முகலாயர்களின், வெள்ளையர்களின் படையெடுப்புக்கு பின்னர் தான் பல்லாயிரம் ஜாதிகள் இந்தியாவில் புற்றீசல்கள் போல் தொற்றிக்கொண்டன என்பதும் அவற்றை பயன்படுத்தியே மக்களை பிரித்து ஆட்சி செய்தார்கள் என்பதும் மறுக்க,மறைக்க முடியாத உண்மைகள். ஜாதி ரீதியான வாழ்க்கை முறை, ஜாதி ரீதியாக முரண்கள், ஜாதி ரீதியாக பாகுபாடுகள், ஜாதி ரீதியான உறவுகள், ஜாதி ரீதியாக பொருளாதாரம் என ஜாதிய கட்டமைப்புக்குள் தான் இந்தியர்கள் சில நூற்றாண்டுகளாக பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜாதியை ஒழிக்க வேண்டுமானால், ஜாதி ரீதியாக ஒதுக்கீட்டை வேண்டுபவர்கள், ஜாதி ரீதியாக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறவர்கள், ஜாதி ரீதியான அரசியல் பிழைப்பு நடத்துகிறவர்கள் தான் ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று நாடகமாடி வருகிறார்கள். ஜாதி வேற்றுமையை தூண்டி விட்டு பிரித்தாளும் சூழ்ச்சியில் வெற்றி பெற்ற முகலாயர்களை விட, வெள்ளையர்களை விட அதீத வேகத்தோடு ஜாதி அரசியல் செய்து பிழைப்பு நடத்துபவர்கள் தான் ஜாதி மறுப்பு என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜாதி ஒழிப்பும், ஜாதி மறுப்பும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சி, பித்தலாட்டம், சூதாட்டம். இதை உணராதவர்களின் நிலை திண்டாட்டம். தற்போதைய அரசியல் கட்டமைப்பு இருக்கும் வரை ஜாதியை ஒழிப்பது என்பது பகல் கனவே. ஜாதியை வைத்து தான் ஆட்சி, அதிகாரம், பொருள் குவிப்பு என உச்சாணிக்கொம்பில் உள்ளனர் சில அரசியல் தலைவர்கள். அதை உணராமல் தியாகிகளாக உள்ளார்கள் அரசியல் தொண்டர்கள். ஜாதியை ஒழிக்க தேவையில்லை. பண்படுத்தினாலே போதுமானது . ஜாதியை மறைக்க தேவையில்லை, அரசியல் கலக்காமல் இருந்தாலே போதுமானது. ஜாதியை அரசியலிருந்து பிரித்து விட்டாலே அரசியலும், ஜாதியும் வளம் பெறும்." என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+