பொன்னியின் செல்வன்.. பார்த்தீர்களா மணிரத்தினம் குசும்பு? படபடக்கும் பாஜக ஆதரவாளர்கள்
சென்னை: பொன்னியின் செல்வன் டிரெய்லரில் குதிரை வண்டியில் செல்லும்போது அம்புகளால் தாக்கப்பட்ட ஆழ்வார்க்கடியான், நாராயணா என சொல்வது தெலுங்கு, மலையாளம், கன்னட டிரெய்லர்களில் இருக்கும் போது தமிழில் மட்டும் அய்யய்யோ என ஒலிப்பதாக பாஜக ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளார்கள்.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி உள்ளிட்டோர் நடித்த படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. டிரெய்லர்களும் இந்த 4 மொழிகளில் வெளியானது. இதில் இந்து தர்ம வெறுப்போடு இந்த படம் எடுக்கப்பட்டிருப்பதாக ஒரு குறிப்பிட்ட காட்சியை பாஜக ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

வந்தியத்தேவன்
அதாவது வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் குதிரை வண்டியில் செல்லும் போது அம்புகளால் தாக்கப்பட்ட போது ஆழ்வார்க்கடியான் நாராயணா என அழைப்பார். அவர் வீர வைணவர் என்பதால் தனக்கு துன்பம் வரும் போது நாராயணா என அழைப்பதுதான் கதை. இது போல் நாராயணா என தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி டிரெய்லர்களில் ஆழ்வார்க்கடியான் அழைக்கிறார்.

அய்யய்யோ
ஆனால் தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் டிரெய்லரின் போது ஆழ்வார்க்கடியான் நாராயணா என சொல்லாமல் அய்யய்யோ என அழைக்கிறார். இது பாஜக, இந்து அமைப்புகளின் ஆதங்கமாகவும் குற்றச்சாட்டாகவும் இருக்கிறது. தமிழக மன்னர்களை பற்றி படங்கள் எடுக்கும் போது அவர்கள் எப்படியெல்லாம் சனாதன தர்மத்தை கடைப்பிடித்தார்கள் என்பதை காட்டாமல் இருப்பதா?

பெரியார் மண்
பெரியார் மண் என்பதால் கடவுளின் பெயரை தமிழ் மொழி டிரெய்லரின் இயக்குநர் மணிரத்னம் கத்தரித்துவிட்டாரா என்ற கேள்வி எழுகிறது. இது போன்ற புராண படங்களை எடுக்கும் முன்னர் வரலாறுகளை தெரிந்து கொண்டு எடுக்க வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மேலும் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புத்தகத்தின்படி பார்த்தோமேயானால் ஆழ்வார்க்கடியான் நம்பி வீர வைணவர். அவர் நாராயணா என்றுதானே அழைக்க வேண்டும். இதை மாற்ற இவர்கள் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திருமலை
திருமலை என்ற இயற்பெயரை கொண்டவர்தான் இந்த ஆழ்வார்க்கடியான். இவர் வைணவம் வளர்த்த ஆழ்வார்களின் மேல் பற்று கொண்டிருந்ததால் தனது பெயரை ஆழ்வார்க்கடியான நம்பி என மாற்றிக் கொண்டார். அவர் தனது உடல் முழுவதும் திருநாமம் இட்டு கொண்டிருப்பார். கல்கியின் நாவலின்படி சோழ பேரரசின் முதல் மந்திரி அநிருத்தப் பிரம்மராயரின் ஒற்றன் ஆவார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications