நபிகள் நாயகம் பற்றி அவதூறு.. பாஜகவினரை குண்டர் சட்டத்தில் கைது செய்க... டிஆர் பாலு வலியுறுத்தல்
சென்னை: நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய பாஜகவின் கல்யாணராமன் உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திமுக.பொருளாளர் டி.ஆர்.பாலு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது, இதையடுத்து பாஜகவின் கல்யாணராமன் உட்பட 10 பேர் மேட்டுப்பாளைய போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய பாஜகவின் கல்யாணராமன் உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திமுக.பொருளாளர் டி.ஆர்.பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்திலுள்ள மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் உள்ளிட்டோர் பேசி வருவதாகவும் அவர்களுக்கு ஊக்கமும் அளித்து பாஜக. தலைமை காப்பாற்றி வருவது கடும் கண்டனத்திற்குரியது என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மற்ற கட்சிகள் கண்டனம் தெரிவித்த பிறகு, தற்போது வெறும் கண்துடைப்பிற்காக மட்டும் அவர்களை போலீசார் கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். துண்டுப் பிரசுரம் வழங்கிய மாணவி வளர்மதி குண்டர் சட்டத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்து கருத்துச் சொன்னால் தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழும் கைது செய்யும் தமிழக காவல் துறை, மதவெறிப் பேச்சுக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் கல்யாணராமன் போன்றவர்களையோ கண்டு அஞ்சுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
பாஜகவுக்கு எதிராக பொதுவாகக் கருத்தும் சொல்லும் நபர்கள் மீதும்கூட நடவடிக்கை எடுக்கும் அதிமுக அரசு, பாஜகவினரோ அல்லது பாஜக ஆதரவு பெற்றவர்களோ தேசியக் கொடியை அவமதித்தாலும் உயர் நீதிமன்றத்தை அவமதித்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய கல்யாணராமனை தாமதமாகக் கைது செய்தது மட்டும் போதாது என்றும் அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications