“ஸ்கெட்சு” அண்ணாமலைக்கா? கவுதமி விலகியவுடன் பாஜக தலைவர்களிடம் தெரிந்த மாற்றம் - கவனிச்சீங்களா?
சென்னை: பாஜக மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி அக்கட்சியில் இருந்து நடிகை கௌதமி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ள நிலையில், பாஜகவின் பல்வேறு முக்கியத் தலைவர்கள் அவரது இந்த முடிவுக்கு வருத்தம் தெரிவித்தும், ஆதரவாகவும் பதிவிட்டு வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு X தளத்தில் பதிவிட்டு உள்ளதாவது, "எனது சக உறுப்பினரான கவுதமி பாஜகவில் இருந்து வெளியேறியதைக் கண்டு வருத்தம் அடைந்தேன். அவர் கடினமாக உழைக்கக்கூடிய உழைப்பாளி. தன்னலமற்ற கட்சிப் பணியாளராக இருந்து வந்தார். அவரது எதிர்கால திட்டங்கள் அனைத்தும் சிறப்பாய் அமைய வாழ்த்துகிறேன்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவிக்கையில், "எனக்குநடிகை கவுதமி மீது அதீதமான அன்பும் பாசமும் உண்டு. அவர் எந்த அளவுக்கு கட்சியை நேசித்தார் என்பது எனக்கு தெரியும். தன்னை ஒரு சினிமா நட்சத்திரம் என்றோ, எங்கு சென்றாலும் தனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றோ அவர் ஒரு போதும் கேட்டது கிடையாது. அடிப்படை தொண்டரைபோல் கட்சிப் பணிகளில் வேலை செய்து கொண்டிருந்தார். எனக்கு அவரது விலகல் கடிதம் மிகுந்த மன வேதனையை அளித்து இருக்கிறது. கவுதமி வழக்கு கொடுத்து உள்ளார். நாங்கள் சட்ட விரோதமாக யாரையும் காக்கப்போவது இல்லை. அவரை நிச்சயமாக மீண்டும் தொடர்பு கொண்டு பேசி தேவையான உதவியை செய்வேன்." என்றார்.
எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, "கௌதமி ஒரு சிறந்த திரைப்பட கலைஞர். அமைதியானவர். பண்பானவர். நல்லவர். தன்னை அழகப்பன் என்ற ஒருவர் மோசடி செய்து விட்டதாகவும், அதனால் மனம் உடைந்து போய் வேதனையுடன் பாஜக விலிருந்து ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார். 20 வருடங்களாக அழகப்பனை தனக்கு தெரியும் என்றும், தானாகவே அவரிடம் சொத்துக்கள் குறித்த ஆவணங்களை அளித்ததாக கூறி விட்டு, இந்த விவகாரத்தில் பாஜக தனக்கு உதவவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது முரண்.
அந்த நபர் பாஜகவில் எந்த பொறுப்பிலும் இல்லாத நிலையில், அவருடைய தனிப்பட்ட விவகாரத்தில் எப்படி கட்சி தலையிட முடியும்? மேலும் சில மூத்த தலைவர்கள் அழகப்பனுக்கு உதவி புரிவதாக சொல்வதும் முறையல்ல என எண்ணுகிறேன். அப்படி யாராவது உண்மைக்கு எதிராக துணை நிற்பதாக கௌதமி அவர்கள் நிரூபித்தால், நான் அவருக்கு பக்கபலமாக இருந்து குரல் கொடுக்க தயார். கௌதமி நீண்ட நாட்களாக கட்சியில் உள்ளார், அவர் மூலம் தான் அழகப்பனுக்கு பாஜகவில் உள்ள சிலருக்கு அறிமுகம் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன்.
அப்படியானால், அவர் எப்படி மற்றவர்களை குற்றம் சொல்ல முடியும் என்று புரியவில்லை. ஒரு வேளை, யாரேனும் கௌதமி ஏமாற்றப்பட்டது தெரிந்து அவருக்கு எதிராக செயல்பட்டதாக ஆதாரம் இருந்தால், வெளிப்படையாக கட்சியின் தலைவர்களிடம் கூறியிருக்கலாம். மேலும் ராஜபாளையம் தொகுதியில் கடைசி நிமிடத்தில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று கூறியிருப்பது அவரின் அரசியல் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்துகின்றது. கடைசி நிமிடத்தில் என்று அவர் கூறியிருப்பதிலிருந்தே, அவருக்கு வாய்ப்பு கொடுக்க கட்சி தலைமை முடிவு செய்திருந்தது என்பதையும், கூட்டணி காரணமாக அந்த தொகுதியில் போட்டியிட முடியாததால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் தெரிகிறது.

ஆகவே, அவருடைய பிரச்சினைக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதோடு, அவரே அவரின் பிரச்சினைகளை வரவழைத்து கொண்டிருக்கிறார் என்பதும் தெளிவாகிறது. அவர் தன்னை மோசடி செய்தவர் மீது புகார் கொடுத்திருக்கிறார். காவல் துறை விரைவாக குற்றச்சாட்டுக்கு ஆளான அழகப்பனை கைது செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கௌதமிக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய நாம் தயாராய் உள்ளோம். உணர்ச்சி வசப்பட்டு கௌதமி கட்சியிலிருந்து விலகுவதாக எடுத்துள்ள முடிவிலிருந்து பின் வாங்கினால் மகிழ்ச்சி. இல்லையேல் அது அவரின் தனிப்பட்ட தவறான முடிவு.
கௌதமி நல்லவர். ஆனால், அவர் ஏமாற்றப்பட்டது கட்சியினாலோ, கட்சியினராலோ அல்ல. அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் புரியட்டும். அவரின் பிரச்சினைகள் விரைவில் தீரட்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார். பொதுவாக கட்சி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து விலகுபவர் மீது விமர்சன மழை பொழியப்படும் நிலையில் கவுதமி விவகாரத்தில் அவர் கட்சியை விமர்சித்த பிறகும்கூட முக்கிய தலைவர்கள் அவரை பாராட்டி பதிவிட்டு உள்ளது அண்ணாமலைக்கு எதிரான நிலைபாடா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.
இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த ஒரத்தி அன்பரசு எக்ஸ் தளத்தில், "கட்சித் தலைமை மீது நேரடியாக குற்றம் சாட்டி விலகி இருக்கும் கவுதமிக்கு கட்சியின் இரண்டாம் நிலை பொறுப்பில் உள்ளவர்கள் பொதுவெளியில் ஆறுதலும், வாழ்த்தும் சொல்வதை பார்க்கும்போது அண்ணாமலை ஒரு #420 மலை என்பதை மேலும் ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறார்கள்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications