3 தொகுதிகளில் பாஜக லீடிங்.. '2'ல் டாப் கியர் - மொடக்குறிச்சியில் கடும் போட்டி
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜக, மாலை 5 மணி வரை மூன்று தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் திமுக முன்னனிலை பெற்றுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
இதைமுன்னிட்டு, ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் ஸ்டாலின் இல்லத்துக்கு விரைந்துள்ளனர். ஏற்கனவே தேசிய தலைவர்கள் பலரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் சொல்லத் தொடங்கிவிட்டனர்.

பாஜக முன்னிலை
இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி, பாஜக மொத்தம் மூன்று தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மொடக்குறிச்சி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய மூன்று தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. ஆனால், இதில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் கடும் இழுபறி நீடிக்கிறது.

671 வாக்குகளே வித்தியாசம்
மொடக்குறிச்சியில் 18 சுற்றுகள் முடிவில் பாஜக வேட்பாளர் சரஸ்வதி 55,397 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதேசமயம், திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் 54,726 அடுத்த இடத்தில் உள்ளார். வாக்கு வித்தியாசம் வெறும் 671 மட்டுமே.

17 ஆயிரம் வாக்குகள்
அதேசமயம், திருநெல்வேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 14 சுற்றுகளின் முடிவில் 46,688 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் 30,986 வாக்குகள் பெற்று இராண்டாம் இடத்தில் இருக்கிறார். கிட்டத்தட்ட 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நயினார் நாகேந்திரன் முன்னிலை பெறுவதால், அவரது வெற்றி இங்கு கனிந்து வருகிறது.

சறுக்கும் திமுக
அதேபோல், நாகர்கோவில் தொகுதியில் பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி 22 சுற்றுகள் முடிவில், 74,058 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். திமுக வேட்பாளர் சுரேஷ் ராஜன் 58,887 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடிக்கிறார், 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காந்தி லீடிங்கில் இருப்பதால், அவரது வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications