50 சீட்.. துணை முதல்வர் பதவி.. விஜய்யிடம் அடித்து சொன்ன டெல்லி.. உருவாகும் தவெக + பாஜக கூட்டணி?
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயுடன் டெல்லி பாஜக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 48 மணி நேரமாக பாஜகவின் டாப் தலைகள் சிலர் விஜயுடன் நெருக்கமாக பேசி வருவதாக தகவல்கள் வருகின்றன. பாஜக கூட்டணியில் இருக்கும் நடிகர் ஒருவரும் விரைவில் விஜயுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

விஜயுடன் நடக்கும் தீவிர உரையாடல்
ஏற்கனவே அரசியல் சாணக்கியர் ஒருவரிடம் விஜய் 3 மணி நேரம் பேசி இருந்தார். ஆளும் திமுக தரப்பு கரூர் வழக்கில் தீவிரமாக இருப்பதால்.. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதற்றத்தோடு இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் இந்த வழக்கு விஜய்க்கு எதிராக திரும்பவே வாய்ப்புகள் அதிகம்.
ஏனென்றால் விஜய் தாமதமாக வந்தது, மற்ற மாவட்டங்களில் இருந்து கூட்டத்தை அழைத்து வந்தது, கூட்டத்தில் இங்கும் அங்கும் தாவியது, ஆம்புலன்ஸ் வந்த போது கூட விடாமல் பேசியது, ஜென்ரேட்டை அறையை உடைத்த தொண்டர்களை கண்டிக்காமல் போனது, மீட்பு பணிகளுக்கு கூட உதவாமல் போனது என்று விஜய் மீது நிறைய தவறுகள் உள்ளன. அவருக்கு எதிராக ஆதாரங்களும் உள்ளன.
இதையடுத்தே விஜய் அரசியல் சாணக்கியரிடம் தீவிரமாக ஆலோசனை செய்து இருக்கிறாராம். 3 மணி நேரம் நடந்த ஆலோசனையில், வழக்கு என்று வந்தால் திமுகவை தடுக்க முடியாது. திமுக ஐடி விங் தவெக கதையை முடித்துவிடும். அவர்களை என்னால் எதிர்க்க முடியாது. நீங்கள்தான் உதவ வேண்டும். டெல்லி உதவியை நீங்கள்தான் பெற்று தர வேண்டும் என்று முன்பே கேட்டு இருந்தார்.
இந்த வழக்கு, ஏற்கனவே உள்ள வருமான வரித்துறை வழக்கை வைத்து இவரை பாஜக கூட்டணிக்குள் இழுக்க டெல்லியில் தீவிர திட்டமிடல் நடக்கலாம் என்கிறார்கள்.. இந்த திட்டத்தில் மூத்த தெலுங்கு நடிகர் ஒருவரும் பேச்சுவார்த்தைக்காக களமிறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
எத்தனை இடங்கள்?
மொத்தமாக விஜய்க்கு 50+ இடங்களை கொடுக்க பாஜக முடிவெடுத்து உள்ளதாம். தமிழக வெற்றிக் கழகம் - பாஜக - அதிமுக இடையே இந்த கூட்டணி அமைக்கப்படும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம். ஏற்கனவே பாஜக கூட்டணியில் அதிமுக உள்ளது. அதிமுகவிற்கு முதல்வர் பதவி உறுதி செய்யப்பட்டுவிட்டது.
எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அமித் ஷா அடித்து சொல்லிவிட்டார். அதேபோல் நயினார் நாகேந்திரனும் அடித்து சொல்லிவிட்டார். பாஜக கூட்டணியில் இருந்த ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் வெளியேறிவிட்டார்கள். இதனால் கூட்டணி வலிமையின்றி இருக்கிறது. கூட்டணியை வலிமைப்படுத்தி தமிழக வெற்றிக்கழகம் வந்தால் மட்டுமே சரியாக இருக்கும்.
அதனால் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயுடன் டெல்லி பாஜக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நீங்கள் கூட்டணிக்கு வாருங்கள்.. வழக்குகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று விஜயிடம் டெல்லி தரப்பு கூறி உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக அடுத்து என்ன முடிவுகளை எடுக்கலாம் என்று விஜய் ஆலோசனைகளை செய்து வருகிறாராம்.












Click it and Unblock the Notifications