யார் அந்த பெண்.. அடையாளம் தெரிந்தது.. கே.டி ராகவன் தொடர்பான வீடியோ: விசாரிக்கும் பாஜக மலர்கொடி
சென்னை: பாஜக முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கே.டி ராகவனுக்கு எதிராக பாலியல் ரீதியான புகார் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணையை பாஜக மாநில செயலாளர் மலர்கொடி தொடங்கி உள்ளார். பல்வேறு கோணங்களில் இந்த வழக்கை விசாரிக்க போவதாக மலர்கொடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் கே. டி ராகவன். கட்சியின் மூத்த உறுப்பினரான இவருக்கு எதிராக தற்போது பாலியல் ரீதியாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வீடியோ கால் ரெக்கார்ட் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் கே. டி ராகவன் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. பாஜக முன்னாள் உறுப்பினர் மதன் ரவிசந்திரன் என்பவர் தனது யூ டியூப் சேனலில் இந்த வீடியோவை வெளியிட்டு கே.டி ராகவனுக்கு எதிராக குற்றஞ்சாட்டி இருந்தார்.

குற்றச்சாட்டு
பெண்களிடம் கே. டி ராகவன் தவறாக நடந்து கொள்வதாக பாஜகவில் இருந்த மதன் ரவிசந்திரன் புகார் வைத்து இருந்தார். அதோடு தன்னிடம் இன்னும் சில வீடியோக்கள் இருப்பதாகவும், விரைவில் அந்த வீடியோக்களை வெளியிடுவேன் என்றும் மதன் தெரிவித்து இருந்தார். இதையடுத்து கே. டி ராகவன் பாஜக மாநில பொதுச்செயலாளர் பதவியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்தார்.

விலகல்
இந்த நிலையில்தான் இன்று மதனின் யு டியூப் சேனல் முடக்கப்பட்டது. அதோடு அவரும் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். ஒரே நாளில் அடுத்தடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் கே.டி ராகவனுக்கு எதிரான புகார் மீதான விசாரணையில் குதித்து இருக்கிறார் பாஜக மாநில செயலாளர் மலர்கொடி. இந்த புகார் வெளிவந்தவுடன் அது தொடர்பாக விசாரிக்க மலர்க்கொடி தலைமையில் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை விசாரணைக்குழு அமைத்தார்.

விசாரணைக்குழு
இந்த புகார் குறித்து மலர்க்கொடி விரிவாக விசாரிப்பார், அதன்பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் மலர்க்கொடி தற்போது இது தொடர்பாக விசாரணை செய்ய தொடங்கி உள்ளார். மலர்க்கொடி தனது விசாரணை குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த புகார் குறித்து அனைத்து தரப்பிலும் விசாரணை நடத்துவோம். அனைத்து கோணத்திலும் விசாரணையை கொண்டு செல்வோம்.

அடையாளம் தெரிந்தது
இந்த வீடியோவில் இருக்கும் பெண் குறித்து விசாரித்து வருகிறோம். அவரின் அடையாளம் தெரிந்துவிட்டது. அவர் எப்படி ரகவானுடன் பேசினார், ஏன் பேசினார், அவர் பாஜகவின் உறுப்பினரா என்பதை வர கூடிய நாட்களில் விசாரிக்க உள்ளோம். ராகவனை திட்டமிட்டு சிக்க வைக்க வேண்டும் என்று ஏதாவது சதி வேலை செய்யப்பட்டதா என்று விசாரிப்போம்.

திட்டமிட்டு
இதற்காக திட்டமிட்டு அந்த பெண் பயன்படுத்தப்பட்டாரா என்பது குறித்தும் விசாரிப்போம். பாஜக தலைவர் அண்ணாமலை ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தவர். அவருக்கு இந்த குற்றங்களின் தன்மைகள், அதை எப்படி விசாரிக்க வேண்டும் என்று தெரியும். அவர் எங்களுக்கு வழிகாட்டுவார். இந்த புகார் தொடர்பாக வேகமாக விசாரணை செய்து, தீர்வு காணும் திட்டத்தில் இருக்கிறோம், என்று மலர்க்கொடி தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications