"டேஞ்சரஸ் கேம்".. ஜெகனுக்கு நடந்த அதே சம்பவம்.. பாஜக போடும் பெரிய திட்டம்.. பல்ஸ் பார்த்த எடப்பாடி!
சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் கூட்டணியை அதிமுக முறிக்க பார்த்தால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய விசாரணை ஆணையங்களை பாஜக ஏவி விட வாய்ப்பு உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் மணி பேட்டி அளித்துள்ளார். பாஜக இப்படி விசாரணை ஆணையங்களை ஏவி விட்டாலும் எடப்பாடி இதை எதிர்த்து நிற்க வாய்ப்புகள் உள்ளன என்று அவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் தொட்டுள்ளது. இந்த மோதலில் பாஜகவின் சப்போர்ட் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி தலைமையில் ஒற்றை தலைமை இருப்பதை பாஜக விரும்புகிறதா? அல்லது ஓபிஎஸ்ஸை இணைத்துக்கொண்டு இரட்டை தலைமை இருக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக உட்கட்சி பூசலுக்கு இடையே அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவரின் பேட்டி பின்வருமாறு..

பேட்டி
கேள்வி: அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் ஓபிஎஸ்ஸை பாஜக ஆதரிக்கும் என்று நினைக்கிறீர்களா?
பதில்: அதிமுகவில் பாஜக கூட்டணி வேண்டும் என்று சொல்வதற்கு கட்சிக்கு உள்ளே ஓபிஎஸ் இருக்க வேண்டும். ஓபிஎஸ் பாஜகவிற்கு ஆதரவாக அதிமுக உள்ளே குரல் கொடுப்பார். இதனால் ஓ பன்னீர்செல்வத்திற்கு பாஜகவும் ஆதரவாக இருக்கும். ஆனால் ஓபிஎஸ்ஸை எடப்பாடி விரும்பவில்லை என்ற போது, எடப்பாடியை பாஜக எவ்வளவு தூரம் கட்டாயப்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்? ஒருவேளை எடப்பாடிக்கு எதிராக வழக்குகளை தூசி தட்டுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவரை சிறையிலேயே தள்ளுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதை எல்லாம் மீறி எடப்பாடி எதிர்த்து நின்றுவிட்டார் என்றால் பாஜக என்ன செய்ய முடியும். 2009ல் ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் இறந்த போது ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதல்வர் பதவியை கொடுக்க சோனியா காந்தி மறுத்தார். அப்போது ஜெகன் மோகன் ரெட்டி கட்சியை உடைத்தார். அப்போது ஜெகன் மோகன் ரெட்டி மீது காங்கிரஸ் வழக்கு போட்டதே.

உட்கட்சி மோதல்
அப்போது காங்கிரஸ் எவ்வளவு அயோக்கியத்தனமாக செயல்பட்டது. ராஜசேகர ரெட்டி குடும்பம் இல்லை என்றால் 2004 காங்கிரஸ் ஆட்சி அமைத்து இருக்கவே முடியாது. அப்படிப்பட்ட ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியை காங்கிரஸ் எப்படி எல்லாம் அவமதித்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை எல்லாம் போட்டார்களே. 481 நாட்கள் சிபிஐ வழக்கு விசாரணை நடத்தி அவரை சிறைக்கு தள்ளியதே. அதன்பின் திரும்பி வந்த ஜெகன் காங்கிரஸ் கட்சியையே ஆந்திராவில் அழித்துவிட்டார். காங்கிரசுக்கு ஜென்ம விரோதியாக மாறிவிட்டனர்.

ஜெகன் மோகன் ரெட்டி
அந்த மாதிரி எடப்பாடி மீது வழக்கு போட்டு, சிறைக்கு தள்ள பாஜக பார்க்கலாம். ஆனால் அது கொஞ்சம் டேஞ்சரஸ் கேம். எடப்பாடி பாஜகவின் வழக்குகளுக்கு பயந்து வழிக்கு வந்தால் ஓகே. ஆனால் எடப்பாடி வழிக்கு வாராமல் ஜெகன் மோகன் போல திமிறி நின்றுவிட்டார் என்றால்? ஜென்மத்திற்கு அதன்பின் எடப்பாடியை எதிர்க்க பாஜக நினைத்து பார்க்கவே முடியாது. கூட்டணி என்று அதிமுக பக்கம் பாஜக போகவே முடியாது. இதனால் பாஜக இந்த ரிஸ்க் எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜக பிரஷர்
கேள்வி: சசிகலா, டிடிவியை ஒதுக்கியது போல எடப்பாடியை ஒதுக்கிவிட்டு அதிமுகவை கட்டுப்படுத்த பாஜக நினைக்காதா?
பதில்: வாய்ப்பு இருக்கு. எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கும், அவருக்கு நெருக்கமாக இருக்கும் சிலர் அவருக்கு எதிராக திரும்பலாம். உதாரணமாக எஸ்.பி வேலுமணி போன்றவர்கள் எதிராக திரும்பலாம். ஆனால் சிவி சண்முகம், கேபி முனுசாமி, ஜெயக்குமார் ஆகியோர் எல்லாம் எடப்பாடி உடன் நிற்கிறார்கள். அப்படி இருக்கும் போது எடப்பாடியை ஓரங்கட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு எடப்பாடிக்கு ஆதரவான நிலைப்பாடும், பாஜகவிற்கு எதிரான நிலைப்பாடும் அதிமுகவில் உள்ளது. பாஜகதான் அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்று அதிமுகவினர் நினைக்கின்றனர். இந்த பல்ஸை புரிந்து கொண்ட நிலையில்தான் எடப்பாடி பாஜகவை கழற்றிவிட பார்க்கிறார்.

கூட்டணி உடையும்
ஆனால் பாஜக அதற்கு அனுமதிக்காது. அதிமுக + பாஜக கூட்டணியை உடைக்க எடப்பாடி திட்டமிட்டால் அதற்கு அமித் ஷா, மோடி அனுமதிக்க மாட்டார்கள். எடப்பாடிக்கு எதிராக அதிமுகவிலேயே ஆட்களை தூண்டி விடுவார்கள். அதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எடப்பாடிக்கு எதிராக கட்சியில் எந்த அளவிற்கு கலகம் ஏற்படும் என்ற கேள்வி உள்ளது. எடப்பாடி பாஜகவை உறுதியாக எதிர்க்கிறார். எடப்பாடி பாஜகவை எதிர்ப்பது மிக வலிமையாக இருப்பதாக எனக்கு நெருக்கமான வட்டாரங்கள், பாஜக வட்டாரங்கள் என்னிடம் தெரிவித்து உள்ளன. பாஜக வேண்டவே வேண்டாம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் போனால் 2026ல் அதிமுக காணாமல் போய்விடும்.

எடப்பாடி உஷார்
சட்டசபைக்கு உள்ளேயே போக முடியாது என்று எடப்பாடி நினைக்கிறார். இதனால் எப்படியாவது பாஜகவை கழற்றிவிட வேண்டும் என்று எடப்பாடி உறுதியாக நினைக்கிறார். இதை தடுக்க பாஜக பிரஷர் கொடுக்கும். ரெய்டு விடலாம், விசாரணைகளை ஏவி விடலாம். எடப்பாடி இதை எப்படி எதிர்க்க போகிறார். இதை எப்படி எதிர்த்து நிற்க போகிறார் என்பதை பார்க்க வேண்டும். என்னை பொறுத்தவரை எடப்பாடி உறுதியாக நிற்பார் என்றுதான் சொல்ல வேண்டும். எனக்கு தெரிந்த வரை எடப்பாடி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பார் என்றே தோன்றுகிறது. பாஜக தனக்கு வேண்டாம் என்ற நிலைப்பாட்டில்தான் எடப்பாடி இருக்கிறார். 2026ல் வெல்ல வேண்டும் என்றால் 2024ல் பாஜகவுடன் கூட்டணி வைக்க கூடாது என்ற நிலைப்பாட்டில்தான் எடப்பாடி இருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
-
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications