மீண்டும் Lockdown-ஆ..? இந்தியாவிற்கு வரப்போகும் பேராபத்து.. ஜோதிடம் சொல்லும் அதிர்ச்சி தகவல்
Lockdown: குரு மற்றும் சனியின் கிரக அமைப்புகள் காரணமாக உலகம் முழுவதும் மீண்டும் கடினமான காலகட்டம் உருவாகும் என்றும், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், உணவுப் பற்றாக்குறை, போர் அச்சம் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கலாம் என்றும் ஜோதிடர் ஷெல்வீ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
ஜோதிடர் ஷெல்வி தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: குரு 9 ஆம் பார்வையாக சனியைப் பார்ப்பதால் உலகத்திற்கு இன்னும் மோசமான கஷ்டகாலம் ஏற்படும். 2031 ஆம் ஆண்டு வரை உலகத்தில் ஏராளமான பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடும். எல்லா வகையிலும் பிரச்சனைகள் ஏற்படும். நிம்மதி இல்லாத தன்மை இருக்கும். படாத பாடு படக்கூடிய அமைப்பு உள்ளது. வேலை வாய்ப்புகளில் பெரிய பாதிப்புகள் ஏற்படும். தொழில், முதலீடு, வாடகை வருமானம் என ஏதாவதொரு வகையில் வருமானம் வரும் வகையில் தயார்படுத்திக் கொள்வது நல்லது.

கடன்களை அடைத்துவிட்டு நிம்மதியாக இருப்பது நல்லது. சனியின் ஆட்டம் குருவின் வீட்டில் இருப்பதால் போர், யுத்த மேகங்கள், பிரச்சனைகள் இருக்கும். இருப்பினும், குரு கடகத்தில் உச்சம் பெற்று மீன ராசி, விருச்சிக ராசி, மகர ராசியைப் பார்க்கிறார். சனிக்கு மிகுந்த வலிமையை குரு பகவான் கொடுக்கிறார். பட்னி, சாப்பாடு கிடைக்காத தன்மை, வண்டி வாகனங்களை தடை செய்வது என கொரோனா காலகட்டத்தில் இருந்து வந்தது போல பிரச்சனைகள் இருக்கும்.
வரப்போகும் ஆபத்து
பங்குச் சந்தையில் சரிவு காணப்படும். நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகளுக்கு பெரிய தொந்தரவுகள் ஏற்படும். உணவுப் பற்றாக்குறை, விவசாயப் பற்றாக்குறை, மருத்துவத்தில் பிரச்சனைகள், தொழில்நுட்ப பாதிப்பு, வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படும். பயணங்கள், தகவல் தொடர்பு, வெளிநாடு செல்வது, சுபகாரியங்களுக்கு செல்வது, சுற்றுலா செல்வது போன்றவை குறையும் அமைப்பு உள்ளது.
மனிதர்களின் வக்கிரத்தால் உலகில் எவ்வளவு அதர்மங்கள் நடக்கிறது என்பதை காட்டும் சூழல் ஏற்படும். குரு பகவான் கடகத்தில் இருக்கக்கூடிய காலகட்டம், மீண்டும் வக்கிரகதியாவது, அதிசாரப் பெயர்ச்சியாவது போன்ற நிலைகள் இருந்தாலும் அடுத்த ஓராண்டுக்கு மக்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சேமிப்பது, தங்கத்தில் முதலீடு செய்வது போன்றவற்றை செய்ய வேண்டும், கிரிப்டோவில் முதலீடு செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்பதை கடந்த 3 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டு வருகிறோம்.
என்னென்ன பாதிப்புகள் வரும்
நிறைய தொழிற்சாலைகளுக்கு பாதிப்பு ஏற்படும். மூலக்கூறுகள் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும். போர் முடிந்து ஈரானுடைய கடல் வழிப் போக்குவரத்து இன்னும் திறக்கப்படவில்லை. அப்படியே திறக்கப்பட்டாலும் பெரிய பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். இந்தியாவில் தேர்தல் முடிந்து ஆட்சியாளர்கள் வந்துவிட்டனர். விலைவாசி உயர்வு, பெட்ரோல், கேஸ் விலை உயர்வால் மனிதர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்.
விவசாயப் பொருட்கள் தடைபடும். இந்தப் பாதிப்புகளுக்குத் தயாராகிக் கொள்ள வேண்டும். குறை கண்டுபிடித்துக் கொண்டே இருக்காமல் நல்ல நண்பர்களை வைத்துக் கொள்வது நன்மை பயக்கும். மற்றவர்களின் திறமைகளை புகழ்ந்து பேசுவது ஏற்றத்தைக் கொடுக்கும். நிறைய நல்லவர்களை சுற்றி வைத்துக் கொள்வது நல்லது. பணக்காரர்கள் ஏழைகளுக்கு உதவுவது நல்லது. காசு, பணமாக கொடுக்காமல் உணவுப் பொருளாக கொடுக்கலாம்.
மிகுந்த எச்சரிக்கை
மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது. பணம் கையிருப்பு வைத்துக் கொள்வது நல்லது. தங்கத்தில் முதலீடு செய்தால் அதனை எப்போது வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம். பதட்டங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. வேலையை இந்த காலகட்டங்களில் விட்டு விடாமல் இருப்பது ஏற்றத்தைத் தரும். நிறைய ராசியினர் இன்னொரு வேலை இல்லாமல் இருக்கும் வேலையை விடுவதைத் தவிர்ப்பது நல்லது.
வேலையில் இருக்கும்போதே இன்னொரு தொழில் செய்வது, இன்னொரு படிப்பு படிப்பது ஏற்றத்தைத் தரும். சேமித்து வைப்பது, குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பது, யாரைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பது நல்லது. கடகத்தில் இருக்கும் குரு தாண்டும் வரை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை கவனமாக இருக்க வேண்டும். நிறைய பேர் மன அழுத்தத்திற்கு ஆட்படும் சூழல் உள்ளது. அதனால், கோயில் வழிபாடுகள், பஜனைகளில் ஈடுபடுவது நல்லது. கிடைப்பதை சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது.
இயற்கை பேரிடர்
அரசாங்கம் நிறைய கஷ்டத்திற்குள்ளாக நேரிடும். எந்த அரசாங்கம் வந்தாலும் விலை ஏற்றம் ஏற்படும். சைக்கிளில் செல்வது, மின்சார வாகனங்களுக்கு மாறுவது போன்றவை நல்லது. மக்கள் மிகுந்த பாதுகாப்போடு இருப்பது நன்மை பயக்கும். தீ விபத்து, அதீத மழை, மலைச்சரிவு, சுற்றுலாப் பகுதிகள் பாதிக்கப்படுவது, விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படும். போர், மத, இன மொழி மோதல்கள், தீவிரவாதம் போன்றவை உலக அளவில் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications