முகத்தில் வருத்தமே இல்லை.. சரத்குமாருக்கு மருத்துவ பரிசோதனை செய்யுங்க.. கீதாஜீவன் புகார்
தூத்துக்குடி: தவெக ஆட்சியை பிடித்து ஒன்றரை மாதம் ஆகிவிட்டது. அறிவிக்கப்பட்ட திட்டங்களை விட, அறிவிக்கப்படாத சர்ச்சைகள்தான் அதிகம் வட்டமடிக்கிறது. சட்டமன்றத்தின் மாண்பை சிதைப்பது, அமைச்சர் போதை வீடியோ சர்ச்சை, உதவியாளர், பட தயாரிப்பாளருக்கு அரசு பதவி என்று தினசரி ஏராளமான சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இந்நிலையில் மைதானத்தில் மாத்திரையை பொடியாக்கும் அமைச்சர் முகத்தில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்கிற வருத்தமே இல்லை. அவரை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று திமுக கீதாஜீவன் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஐபிஎல் பார்க்கும்போது ஒரு அமைச்சர் செல்போன் மீது மாத்திரையை வைத்து பொடியாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அதற்கு அவர் ஒரு விளக்கமும் கொடுத்துள்ளார். அமைச்சர் சரத்குமாரை பத்திரிகையாளர்கள் முன்பு, ஆண்டராய்ட் போனில் மாத்திரையை வைத்து ஏடிஎம் கார்டில் பொடியாக்க டெமோ காட்ட சொல்லுங்கள்.

வளர்ச்சி பாதையில்
என்னயா விளக்கம் இது. அந்த வீடியோவுக்கு தக்லைப் என்கிற தலைப்பில் பதிவிட்டுள்ளார். யாராலும் செய்ய முடியாத செயலை தான் தக்லைப் என்பார்கள். தில்லான செயலை செய்கிறேன் என்று தான் அவர் அப்படி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். முதலமைச்சர் மாரத்தான் தொடங்கி வைக்கும்போது இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். அது அவரே எடுத்ததுதான். 2 வருடங்களுக்கு முன்பு எடுத்தது. குழந்தைக்கு அப்போது ஒரு வயது என்றெல்லாம் கூறுகிறார்.
அந்த வீடியோவில் குழந்தையோ, மாத்திரையோ எங்கும் தெரியவில்லை. சரத்குமார் முகத்தில் வருத்தம் கூட தெரியவில்லை. பொய்யான விளக்கத்தை கொடுத்துள்ளார். மருத்துவ பரிசோதனை மூலம் தான் அவர் அதை போலி என்று நிரூபிக்க முடியும். நாட்டை வழிநடத்தும் முதலமைச்சரின் கீழ் பணியாற்றுவோர் இப்படி இருந்தால், நம் தமிழகம் எங்கே போகும். நாட்டை காப்பாற்ற வேண்டும். தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
சரத்குமார் மீது நடவடிக்கை
எங்கள் ஆட்சியில் தமிழக பொருளதாரம் வளர்ச்சியடைந்தது. தமிழகம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். அதுதான் எங்களின் நோக்கம். செய்யத்தகாத செயலலில் ஈடுபடுவேது தவறு. போதைத்தடுப்பு படை அமைக்கப்படும் என முதலமைச்சர் கூறினார். அதை செய்யவில்லை. சரத்குமார் மீது நடவடிக்கை எடுத்து எதிர்காலத்தில் இளைஞர்களை நல்வழிபடுத்த வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications