படையப்பா நடிகை சித்தாராவை நினைவு இருக்கா? படத்தை போலவே நிஜத்திலும் அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாக ஒரு சில நடிகைகள் மட்டும் எந்த கேரக்டர் நடித்தாலும் அவர்களுக்கு உடனே செட்டாகிவிடும். அதுபோல ஒருவர்தான் நடிகை சித்தாரா. ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி இப்போது அம்மா கேரக்டரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் யோகி பாபு உடன் நடித்த திரைப்பட வீடியோ சோசியல் மீடியாவில் அதிக கவனம் பெற்று வருகிறது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் குடும்பப் பாங்கான கதாநாயகியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்களில் சித்தாராவும் ஒருவர். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்று இருப்பார். அவருடைய தெத்துப்பல் சிரிப்பு கூட பலருக்கும் பிடிக்கும். இப்போது யோகி பாபுவுக்கு அம்மாவாக சித்தாரா ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தை பார்த்ததும் இது சித்தாரவா எப்படி இருந்தவர் இப்படி மாறிட்டாரே என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை சித்தாராவின் தற்போதைய நிலை

அவருடைய தோற்றத்தை பார்த்து பலர் பீல் பண்ணி வருத்தம் தெரிவித்தாலும், இன்னும் ஒரு சிலர் வயது எல்லோருக்கும் வரும்.. இப்போதும் அதே அமைதியான முகம் அவருக்கு இன்னும் மாறவே இல்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். 90ஸ் ரசிகர்களுக்கு சித்தாரா என்றதும் நினைவுக்கு வருவது படையப்பா திரைப்படம் தான். அந்த படத்தில் ரஜினிகாந்தின் தங்கச்சியாக நடித்த கேரக்டர் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது.

அதிலும் நாசர் மீது காதல் வைத்து கடைசியில் அந்த திருமணம் நின்று போகும் காட்சிகளில் அவர் கண்ணீர் சிந்துவதை பார்த்து கண்ணீர் விட்டவர்கள் ஏராளம். ஆனால் ஓரு ஆச்சரியம் என்னவென்றால் அந்த கேரக்டரை போலவே சித்தாராவின் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் நடக்காமல் போய்விட்டது என்று பல வதந்திகள் பரவி வந்தது. ஆனால் அது குறித்து அவர் கொடுத்த விளக்கம் தான் அனைவருக்குமே ஆச்சரியத்தை கொடுத்தது.

Sithara Padayappa Rajinikanth Yogi Babu

சித்தாராவின் ஆரம்ப காலம்

அதாவது கேரளாவில் சேர்ந்த சித்தாராவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது கே பாலச்சந்தர் தான். புது புது அர்த்தங்கள் படத்தின் மூலம் அறிமுகமான அவர் அதற்கு பிறகு புது வசந்தம், புரியாத புதிர், கேளடி கண்மணி, நட்புக்காக உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பவமொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

படையப்பா தயாரிப்பாளருக்கு ஐந்து பவுன் தங்க செயின் கொடுத்த ரஜினிகாந்த்.. பெரிய மனசு தான்!
அதே நேரத்தில் அவருக்கு திருமண வரண்களும் அதிகமாக வந்திருக்கிறது. ஆனால் அவர் அதற்கு மறுத்திருக்கிறார். அதனால் அவருக்கு காதல் தோல்வி அதனால்தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றெல்லாம் பல வதந்திகளில் பரவி இருக்கிறது. இது குறித்து அவர் பேசும்போது, நான் சின்ன வயதிலேயே திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று முடி எடுத்துவிட்டு முடிவெடுத்து விட்டேன்.

Sithara Padayappa Rajinikanth Yogi Babu

நடிகை சித்தாரா பேட்டி

என்னுடைய அப்பா மீது எனக்கு ரொம்ப பாசம். அவர் திடீரென விபத்தில் இறந்தது என்னுடைய வாழ்க்கையே தலைகீழாக மாற்றிவிட்டது. அதற்கு பிறகு அம்மாவையும் இரண்டு தம்பிகளையும் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. நான் திருமணம் செய்து கொண்டால் அவர்களை முழுமையாக கவனிக்க முடியாது என்று நினைத்தேன். அதனால்தான் என்னுடைய குடும்பத்திற்காகவே நான் வாழ முடிவு செய்தேன் என்று அந்த பேட்டியில் பேசியிருந்தார்.

Sithara Padayappa Rajinikanth Yogi Babu

சித்தாரா கல்யாணம் பண்ணாத காரணம்

தற்போது சித்தாரா 52 வயதிலும் அதே முடிவு முடிவில் இருக்கிறார். சித்தாராவின் அப்பா பரமேஸ்வர் நாயரும், அம்மா வச்சலா நாயரும் கேரளா மின்சார வாரியத்தில் உயர் அதிகாரிகளாக வேலை பார்த்து இருக்கிறார்கள். அப்போது தான் எதிர்பாராத விதமாக அவருடைய அப்பாவின் இறப்பு நடந்திருக்கிறது. அதற்குப் பிறகு மொத்த குடும்ப பொறுப்பையும் சித்தாரா ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.

நடிகை சித்தாரா பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறிய கருத்து.. கல்யாணம் பண்ணாததற்கு காரணம் அந்த நபரா?
திரைப்படங்களில் மட்டுமல்லாமல் ஒரு சில சீரியல்களிலும் சித்தாரா நடித்திருந்தார். இந்த நிலையில் யோகி பாபுவுக்கு அம்மாவாக சித்தாரா நடித்த சன்னிதானம் பி ஓ படத்தில் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அதை பார்த்ததும் எப்படி இருந்த சித்தாரா இப்படி மாறிட்டாரே என்று ஆச்சரியத்தோடு கமெண்ட்ஸ்கள் கொடுத்தாலும் அவருடைய நடிப்பை பற்றி பலரும் பேசி வருவதையும் பார்க்க முடிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+