நடிகை சித்தாரா பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறிய கருத்து.. கல்யாணம் பண்ணாததற்கு காரணம் அந்த நபரா?
சென்னை: பிரபல நடிகை சித்தாரா பல வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் அவரைப் பற்றி நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் நடிகை சித்தாரா இத்தனை வருடங்கள் ஆகியும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் ஒரு நபர் தான் என்றும் மேலும் சில தகவல்களையும் கூறியிருக்கிறார்.

அத்தோடு நடிகை சித்தாரா பற்றி பயில்வான் ரங்கநாதனின் பேட்டிக்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை சித்தாரா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முப்பது வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் 1986 ஆம் ஆண்டு காவிரி என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.
அத்தோடு புதுப்புது அர்த்தங்கள், புதுப்புது ராகங்கள், புதுவசந்தம் புரியாத புதிர் என்று பல திரைப்படங்களிலும் அந்த நேரத்தில் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தாஇருந்தார். குறிப்பாக இவருக்கு 1990 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான புது வசந்தம் என்ற திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் பிரபலத்தை கொடுத்தது. பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்று இருக்கும் இவருடைய ஹோம்லியான முகம் பலருடைய ஃபேவரட் ஆகி இருந்தது.
அந்த நேரத்தில் பெண் பார்க்கும்போது கூட நடிகை சித்தாரா மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னவர்களும் ஏராளம். இந்த நிலையில் இவர் கதாநாயகியாக நடித்ததைத் தொடர்ந்து அக்கா, அம்மா, என்று பல கேரக்டரில் இப்போ வரைக்கும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் இப்போது வரைக்கும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகத்தான் வசித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் நடிகை சித்தாரா ஆரம்ப காலகட்டத்திலேயே தனக்கு கவர்ச்சியாக நடிப்பது வேண்டாம் என்று மறுத்து ஹோமிலியாகவே தொடர்ச்சியாக நடித்து வந்ததாலே இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் தான் இவருக்கு கேரளாவில் உள்ள ஒரு சாமியார் மீது அதிக பக்தி வந்திருக்கிறது. அதனாலேயே இவரும் ஒரு பெண் சாமியாராக மாறிவிட்டதாக சித்தாரா கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் நடிகை சித்தாரா திருமணம் செய்து கொள்ளாதது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் ஏற்கனவே நடிகை சித்தாரா பேசியதை மேற்கோள் இட்டு பேசும்போது, சித்தாரா திரை உலகின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ஒருவரை காதலித்ததாகவும், ஆனால் பல ஆண்டுகள் அந்த காதல் கைகூடாமல் இருந்ததாலே பிறகு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று சித்தாரா கூறி இருக்கிறார். என்று பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications