படையப்பா தயாரிப்பாளருக்கு ஐந்து பவுன் தங்க செயின் கொடுத்த ரஜினிகாந்த்.. பெரிய மனசு தான்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு உருவான படையப்பா படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் என்றும் தனி இடம் பிடித்தது. அந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆன பின்னரும் அதே உற்சாகத்துடன் ரசிகர்கள் கொண்டாடி வருவது தான் அதன் பெருமை. சமீபத்தில் ரீ-ரிலீஸ் ஆனதும், புதிய படங்களைப் போலவே திரையரங்குகளில் கூட்டம் குவிந்தது.

படையப்பா படத்தின் நடிகர்கள்
1999-ம் ஆண்டு இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குடும்ப பாசம், காதல், சண்டை, பெருமை-இவை அனைத்தையும் ஒன்றாக கலந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இது அமைந்தது.
படத்தின் கதை ஒரு சாதாரண மனிதன் தனது வாழ்க்கையில் சந்திக்கும் இழப்புகளையும், அவமானங்களையும் கடந்து வாழ்க்கையில் எப்படி முன்னேறுகிறார் என்பதுதான். தந்தையின் மரணத்திற்குப் பிறகு குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பை ஏற்கும் ரஜினிகாந்த், வாழ்க்கையில் எதிர்ப்புகளை சந்தித்தும் மீண்டு வருகிறார். அந்தப் பயணத்தில் காதல், துரோகம், பழி வாங்குதல் என பல திருப்பங்களும் படத்தில் இருக்கிறது.
இந்த படத்தின் மிகப்பெரிய பலம் என்னவென்றால், அதில் வரும் கேரக்டர்கள். குறிப்பாக, நீலாம்பரி என்ற வில்லி கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்த விதம் இன்று வரை பேசப்படுகிறது. எனக்கு பொண்ணு புடிச்சிட்டா அது அடைந்தே தீருவேன் என்ற நிலம்பரியின் பிடிவாதம் கூட பலருக்கும் பிடித்தது தான்.
ஹிட் பாடல்கள்
இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்தார். "என் பேரு படையப்பா", "மின்சார கண்ணா" போன்ற பாடல்கள் இன்று வரை ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கின்றன. பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும், இந்த படம் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த கடைசி படம். அதிலும் அவருடைய காட்சிகள் இப்போது பார்க்கும்போது கூட பலரையும் பீல் பண்ண வைக்கும் அளவுக்கு இருக்கும்.
படம் வெளியான போது மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாக தொலைக்காட்சியிலும், தியேட்டரிலும் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சமீபத்தில் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் வெளியிடப்பட்டபோதும், இளம் ரசிகர்களும் கூட திரையரங்குகளில் கூட்டம் குவித்தனர்.
இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, படத்தின் இணை தயாரிப்பாளரான பி. எல். தேனப்பனை நேரில் அழைத்து, ரஜினிகாந்த் தனது கையால் 5 சவரன் தங்க சங்கிலி பரிசாக வழங்கியுள்ளார். இது வெறும் பரிசு அல்ல; "நம்மோட வெற்றிக்கு காரணமானவர்களை மறக்கக்கூடாது" என்பதற்கான ஒரு உணர்ச்சி மிகுந்த வெளிப்பாடு.
இன்றைய காலத்திலும் "படையப்பா" போன்ற படங்கள் மீண்டும் உருவாகுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுகிறது. அதற்கு காரணம், அந்த படத்தில் இருந்த கதை, எமோஷனல், மறக்க முடியாத காட்சிகள் பல இருந்ததே. அதனால்தான்,
படையப்பா ஒரு படம் மட்டும் இல்ல... ரசிகர்களின் நினைவில் என்றும் வாழும் ஒரு உணர்ச்சி.
-
பாரதிராஜா இறுதி சடங்கிற்கு பிறகு மனைவி வெளியிட்ட உருக்கமான அறிக்கை.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள் -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
ரஜினிகாந்த் மருமகனுக்கு பெரிய பொறுப்பு.. அப்படியே தூக்கி கொடுக்கும் அண்ணாமலை! விசாகன் வருவாரா? -
உன் நடிப்பு பிடிக்காதுன்னு பாரதிராஜா சொல்லுவாரு.. கடைசிவரை நான் நினைச்சது நடக்கல! ரஜினிகாந்த் உருக்கம் -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
உடைந்த பாரதிராஜா.. மகன் மனோஜ்ஜை மறக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுது, புத்திர சோகத்தாலேயே போன உயிர் -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
கடைசியில யாருமே இல்லாம போயிட்டீங்க இல்ல? இப்படி அனாதையா.. பாரதிராஜா உடலை கண்டு கதறிய கங்கை அமரன் -
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
பாரதிராஜா யார்? ஸ்டூடியோக்களில் முடங்கிய திரையுலகை கிராமத்து மண்வாசனைக்கு கூட்டிச்சென்ற கலை வித்தகன் -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை!












Click it and Unblock the Notifications