ஊட்டி ஆம்னி பஸ்ஸில் அலறிய சென்னை மாணவி! ஸ்லீப்பர் படுக்கை அருகே இருட்டில் வெள்ளை ஆடையுடன் யாரது?
நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி மாணவிக்கு இப்படியொரு கொடுமை நடந்துள்ளது.. ஆம்னி பஸ்ஸில் நைட் நேரத்தில் டிராவல் செய்துள்ளார்.. அப்போது நள்ளிரவு நேரத்தில் ஆபாச நபரின் செய்கையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.. ஓடும் பஸ்ஸில் நடந்த இந்த அக்கிரமம், பயணிகள் மத்தியில் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.. என்ன நடந்தது பஸ்ஸில்?
ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். அந்த வகையில், சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தார். விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து ஊட்டிக்கு ஆம்னி பஸ் ஒன்றில் பயணம் செய்துள்ளார்..

ஊட்டி ஆம்னி பஸ்
நேற்று அதிகாலை நேரத்தில் அந்த பஸ் நீலகிரி மாவட்ட எல்லைக்குள் நுழைந்து ஊட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்ஸின் மேல் படுக்கையில் அதாவது ஸ்லீப்பர் பெர்த்தில் மாணவி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலையில் இருட்டை பயன்படுத்திக் கொண்டு, மர்ம நபர் ஒருவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் திடுக்கிட்டு முழித்த அந்த மாணவி அதிர்ச்சியடைந்து அலறி கத்தியுள்ளார்.
மாணவியின் சத்தம் கேட்டு பஸ்ஸில் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் பதறியடித்துக் கொண்டு எழுந்தனர். ஆனால் அதற்குள் அந்த நபர் அங்கிருந்து நழுவிவிட்டார். இருட்டாக இருந்ததால் பாலியல் தொல்லை கொடுத்தது யார் என்று உடனடியாகத் தெரியவில்லை. இருந்தாலும் தனக்குத் தொல்லை கொடுத்த நபர் வெள்ளை கலர் சட்டை அணிந்திருந்தார் என்பதை அந்த மாணவி துல்லியமாக அடையாளம் கூறினார்.
வெள்ளை உடையுடன் யாரது
உடனடியாக இதுகுறித்து போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் நீலகிரி "சிங்கப்பெண் அதிரடிப்படை" போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரோனியா மற்றும் பெண் போலீசார் வீனா, சவிதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பஸ்ஸை நிறுத்தி, அங்கிருந்தவர்களிடம் அதிரடியாக விசாரணையைத் தொடங்கினர்.
போலீசாரின் தீவிர விசாரணையில், அந்த ஆம்னி பஸ்ஸில் மாற்று டிரைவராக வந்த மதுரையைச் சேர்ந்த கார்த்திகேயன் (40) என்பவர்தான் பாலியல் தொல்லை தர முயன்றவர் என்பது அம்பலமானது. மாணவி சொன்னபடியே அவர் வெள்ளை கலர் டிரஸ்ஸும் அணிந்திருந்தார்.
சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார்
இதையடுத்து சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் கார்த்திகேயனைப் பிடித்து ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட டிரைவர் கார்த்திகேயனுக்கு ஏற்கனவே கல்யாணமாகி குழந்தைகளும் இருக்கிறார்களாம். ஊட்டிக்கு வந்த ஆம்னி பஸ்ஸில் மருத்துவ மாணவிக்கு நேர்ந்த இந்த துயர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல சிங்கப்பெண் படையினரின் அதிரடியும் தமிழகம் முழுவதுமே கவனிக்கப்பட்டு வருகிறது.. நேற்றுகூட வேலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க செயல்பட்டு வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை மொத்தம் 10 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகள் குடும்ப வன்முறை, பாலியல் தொல்லை உள்ளிட்ட எந்தவித அச்சுறுத்தலுக்கும் தயக்கமின்றி 1091 அல்லது 112 அவசர உதவி எண்களை தொடர்புகொண்டு காவல்துறையின் உடனடி உதவியை பெறலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications