விஜய்யை தூக்கிப் பிடிக்கிற ரேஸில் யார் முதலிடம்?.. திருமாவளவன், வைகோவை சீண்டிய ஆர்.பி. உதயகுமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் விஜயை தூக்கிப் பிடிப்பதில் கூட்டணிக் கட்சித் தலைவர்களான திருமாவளவன், வைகோ ஆகியோரிடையே பெரும் போட்டி நிலவுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மேலும், தவெக அரசில் அமைச்சர்கள், ஆலோசகர்கள் இடையே நிலவி வரும் பூசல் காரணமாக பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டு விடியோவில் கூறியுள்ளதாவது: தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இந்த காரணத்தால் ஆட்சி அமைக்கின்ற பெரும்பான்மை இல்லை என்பதால் நான்கு முறை ஆளுநரிடம் அலைந்தது. அதுமட்டுமல்ல, பெரும்பான்மை நிரூபிப்பதற்காக தேர்தலிலியே விசில் சின்னத்தை எதிர்த்துப் போட்டியிட்ட மற்ற கட்சிகளில் குறிப்பாக கொள்கை மாறுபாடு கொண்ட கட்சிகளின் தயவை எதிர்பார்த்து அவர்களையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டுதான் இன்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது.

RB Udhayakumar vijay

இந்த நிலையில், ஒவ்வொரு கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தினந்தோறும் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். விஜயை யார் தூக்கிப் பிடிப்பது என்பதில் தான் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குள் போட்டி நடைபெற்று வருகிறது. விஜயை தூக்கிப் பிடிப்பதில் முதலிடத்தில் யார் என்பதில் தான் திருமாவளவனும், வைகோவும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதுதான் இப்போது தமிழ்நாட்டுடைய நிலைமை. இது பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியைத் தருகிறது. தவெக அமைச்சர்களான ஆனந்த், ஆதவ் அர்ஜுனாநிர்மல் குமார், ராஜ் மோகன் என அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு அணியாகவும், அதேபோல, அதிமுகவில் இருந்து அகதிகளாகச் சென்றவர்களுக்கு தலைமை தாங்கும் செங்கோட்டையன் ஒரு அணியாகவும் அதிகாரப் போட்டியை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இதுமட்டுமல்லாமல் தலைமைச் செயலர் தலைமையில் ஒரு அணி, முதல்வர் விஜயின் நட்பு வட்டாரத்தில் முதல்வரின ஆலோசர்கள் என்று ஒரு அணி, அவருடைய நலம் விரும்பிகள் அணி என எல்லோரும் தனித்தனியாகப் பிரிந்து பிரிந்து கிடக்கின்றனர். அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்கிற நிலையும் வந்திருக்கிறது.

இதன் காரணமாக, ஒட்டுமொத்தமாக சுகாதாரத் துறை, தொழில் துறை, கல்வித் துறை, நகராட்சி நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம், பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை என எல்லா துறைகளின் பணிகளும் தற்போது முடங்கிப் போய் கிடக்கிறது என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+