மேயர் பிரியா அறிவித்த 90 திட்டங்களுக்கு மறு ஆய்வு.. சென்னை மாநகராட்சியில் என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சி வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், மேயர் பிரியா அறிவித்த திட்டங்களின் மதிப்பீடுகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சுமார் 90 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவைகளில் பெரும்பாலான திட்டங்களின் மதிப்பீடுகள் தேவைக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன.. இதனாலேயே ஒட்டுமொத்த திட்டங்களையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்த தவெக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் வரவு 7717 கோடி ரூபாயாக இருக்கும் என்றும், செலவு 9319 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் மாநகராட்சிக்கு சுமார் 1602 கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது.

Chennai Mayor Priya Chennai Corporation Chennai Corporation News Chennai Mayor Priya Projects Chennai Corporation Budget Chennai News

சென்னை மாநகராட்சி

இதுமட்டுமன்றி, உலக வங்கி மற்றும் ஜப்பான் வளர்ச்சி வங்கி ஆகியவற்றில் ஏற்கனவே வாங்கப்பட்ட 2000 கோடி ரூபாய் கடனுக்காக, ஆண்டுதோறும் 95 கோடியே 20 லட்சம் ரூபாய் வட்டியாகவே செலுத்தப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட கடன் சுமைக்கு இடையே, பள்ளி மாணவர்களுக்கான பாதுகாப்பான வழித்தடங்கள் அமைக்க 200 கோடி ரூபாய், நீர்நிலைகளை சீரமைக்க 100 கோடி ரூபாய், பூங்காக்களை பொலிவூட்ட 60 கோடி ரூபாய் மற்றும் வெள்ளத் தடுப்புச் சுவர் அமைக்க 55 கோடி ரூபாய் என திட்டங்களை மேயர் பிரியா லிஸ்ட் போட்டார்.. ஆனால், இந்த திட்டங்களின் பின்னணியில் நடந்த ஒரு சிறிய கொள்முதல் விவகாரம்தான், அரசாங்கத்தின் சந்தேகத்தை துளைத்தெடுத்துள்ளது.

மேயர் பிரியாவுக்கு சிக்கல்?

மாநகராட்சிப் பள்ளிகளுக்கு 100 பிரிண்டர்கள் வாங்க பட்ஜெட்டில் 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், புதிய அரசு நேரடியாக தலையிட்டு ஆய்வு செய்தபோது, அதே பிரிண்டர்களை வெறும் 22 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயிலேயே வாங்கி முடிக்க முடிந்தது. இதன்மூலம் அரசுக்கு 37 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மிச்சமானது.

ஒரு சின்ன பிரிண்டர் வாங்குவதிலேயே இத்தனை லட்சம் ரூபாய் கூடுதல் கணக்கு காட்டப்பட்டிருக்கிறதென்றால், பல நூறு கோடிகளில் அறிவிக்கப்பட்ட மற்ற திட்டங்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

என்ன நடக்கிறது சென்னை மாநகராட்சியில்?

அதனால்தான், மேயர் பிரியா அறிவித்த அத்தனை 90 திட்டங்களின் நிதி மதிப்பீடுகளையும் உடனடியாக மறு ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது திட்டங்களுக்கான மதிப்பீடுகள் தேவைக்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் இப்போது சென்னை மாநகராட்சி வட்டாரத்தில் பெரிய அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, "திமுக ஆட்சியில், எத்தனையோ பணிகளுக்கு கூடுதலாக தொகை ஒதுக்கப்பட்டது. முக்கியமாக 300 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு மேம்பாலம் கட்ட முடியும் என்றால், 375 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள்.. அதனால்தான், 800 கோடி ரூபாய்க்கு மேலான ஒப்பந்த பணிகள் ரத்து செய்யப்பட்டு, மறுமதிப்பீடு செய்யப்படுகிறது.

மேயர் அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படும்.. ஆனால் அதே நேரம், ஒதுக்கப்படும் தொகை மட்டும் மறு ஆய்வு செய்யப்பட்டு, மதிப்பீடு இறுதி செய்யப்படும்... இதனால் மாநகராட்சியின் செலவினம் குறைக்கப்பட்டு, நிதி பற்றாக்குறையும் பெருமளவு குறைக்கப்படும்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+