திருவனந்தபுரம் தொழில் அதிபர்.. சபலத்தால் பறிபோன 5 கோடி.. விசாரித்தால் மிகப்பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தெலுங்கானாவை சேர்ந்த விஜயகுமார் என்பவர் ஜெர்மனி மொழி பயிற்றுவிக்கும் நிறுவனத்தை திருவனந்தபுரத்தில் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் நெய்யாற்றின்கரையை சேர்ந்த ரோஷினி என்பவர் பணியாற்றி வந்தார். இந்த சூழலில் நண்பர்களுடன் சேர்ந்து தொழிலதிபரை மிரட்டி ரூ.5 கோடி பறித்ததாக இளம்பெண் ரோஷினியை போலீசார் கைது செய்தனர். ஆனால் உடனடியாக நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. இந்த சூழலில் ரோஷினி கூறிய புதிய தகவல் விசாரணையின் கோணத்தையே மாற்றி உள்ளது.

திருமணத்தை மீறிய உறவு எந்த அளவிற்கு போகும் என்பதற்கு பல உதாரணங்கள் இந்த உலகில் நடந்துள்ளது. பொதுவாக திருமணத்தை மீறிய காதல், இரண்டாம் திருமணமாக செல்வது இன்றைய சூழலில் கடினம். சமூகத்திற்கு பயந்தும், சந்தர்ப் சூழலுக்கு பயந்தும் பலர் அந்த முடிவினை எடுப்பது இல்லை. அப்படி அந்த முடிவினை எடுக்க வேண்டும் என்றால், முதல் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும். அதற்கு தயாராக இருப்பவர்கள் தைரியமாக எடுக்கிறார்கள். மற்றவர்கள், சமூகத்திற்கு தெரியாமல் செயல்படுகிறார்கள். அதனை சாதகமாக்கி சிலர் சொத்துக்களை பறிப்பது அல்லது சொத்து, பணத்தை வாங்குவதாக புகார்கள் உள்ளது. திருவனந்தபுரத்திலும் அப்படியான ஒரு சம்பவம் நடந்துள்ளது.

Thiruvananthapuram Businessman Young woman swindles 5 crore with the help of friends

தெலுங்கானாவை சேர்ந்த விஜயகுமார் என்பவர் ஜெர்மனி மொழி பயிற்றுவிக்கும் நிறுவனத்தை பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகம் திருவனந்தபுரத்திலும் செயல்பட்டு வருகிறது. அதில் நெய்யாற்றின்கரையை சேர்ந்த 33 வயதாகும் ரோஷினி என்ற இளம் பெண் கடந்த 2022 முதல் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் திருமணமான ரோஷினிக்கு 2023 ஜூன் மாதம் 22-ந் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.. அந்த குழந்தை உன்னால் தான் பிறந்தது என விஜயகுமாரிடம் கூறினாராம். மேலும் உங்களுடைய மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் இதுகுறித்து கூறப்போகிறேன் என கூறினாராம். உடனே அவர் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விடாதே என கூறினாராம். அதன்பிறகு பணம் கேட்டு ரோஷினி மிரட்டியுள்ளார். இதற்கு சில நண்பர்களும் உதவினார்களாம்.

அந்த வகையில் பல தவணைகளாக ரூ.5 கோடி வரை ரோஷினி பணம் பறித்துள்ளதாக விஜயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் மலையின் கீழ் பகுதியில் 22 சென்ட் நிலத்தை விஜயகுமாரிடம் மிரட்டி வாங்கி தனது பெயரில் பதிவு செய்து கொண்டாராம். அது தவிர 45 சவரன் நகைகளையும் அபகரித்துள்ளாராம்.

இதனை விஜயகுமார் வஞ்சியூர் போலீசில் புகார் அளித்து தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ரோஷினியை முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் கைது செய்தனர். மேலும் இளம்பெண்ணின் கூட்டாளிகள் ஜிபின், உன்னிமோள் ஜிபின், அபிஷேக் தேடிவருகின்றனர். இதற்கிடையே கைதான ரோஷினிக்கு கோர்ட்டு ஜாமீன் அளித்துள்ளது. மேலும் ரோஷினி கூறுகையில், நானும் விஜயகுமாரும் திருமணம் செய்து தொழிலில் பங்குதாரராக இருந்தேன். அவர் பொய்யான புகார் அளித்துள்ளார். மேலும் அதற்கான புகைப்படத்தையும் கொடுத்துள்ளார். அதன் பேரிலும் போலீஸ் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+