திமுகவோட 2.0 தான்.. தவெக அரசும் தீய சக்தின்னு ஒரு பேரு வாங்க போகுது! விஜய் அரசை விளாசிய மோகன் ஜி!

Subscribe to Oneindia Tamil

சேலம்: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் கடந்த ஆட்சியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. கோவில் தங்கம் தொடர்பான விவகாரங்கள் குறித்து மக்களிடம் அதிருப்தி இருந்தது. தற்போது தவறுகளை சரிசெய்வதாக அமைச்சர் கூறியிருப்பதை வரவேற்றாலும், தமிழக வெற்றி கழக அரசு சில விஷயங்களில் திமுக ஆட்சி 2.0 போல் செயல்படுகிறது என இயக்குநர் மோகன் ஜி கூறியுள்ளார். மேலும், கார்த்திகை தீப திருநாளன்று நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றப்படவில்லை என்றால், தமிழக வெற்றி கழக அரசு தீய சக்தி என இந்து மக்கள் கருதுவார்கள் எனவும் கூறினார்.

சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள வெண்ணங்குடி முனியப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த இயக்குநர் மோகன் ஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்த பிறகு திரைப்படங்கள் சுதந்திரமாக வெளியாகும் சூழல் உருவாகியுள்ளது.

Mohan G

முந்தைய ஆட்சியில் குறிப்பிட்ட சித்தாந்தத்தை ஆதரிக்கும் திரைப்படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகவும், எதிர்மறை கருத்துகளை கொண்ட படங்களுக்கு சிரமங்கள் இருந்து. இது சினிமா துறையில் இருந்த அனைவருக்குமே தெரியும்.

மோகன் ஜி

திருப்பரங்குன்றம் விவகாரத்தை பொறுத்தவரையில் கார்த்திகை தீப திருநாளன்று நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றப்படவில்லை என்றால், தமிழக வெற்றி கழக அரசு தீய சக்தி என இந்து மக்கள் கருதுவர்கள். அதனால் மிகப்பெரிய எதிர்ப்பை சந்திக்க நேரிடும். தற்போதைய அரசின் நடவடிக்கைகள் கண்துடைப்பு போல் இருக்கிறது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் கடந்த ஆட்சியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. கோவில் தங்கம் தொடர்பான விவகாரங்கள் குறித்து மக்களிடம் அதிருப்தி இருந்தது.

தமிழக வெற்றி கழகம்

தற்போது தவறுகளை சரிசெய்வதாக அமைச்சர் கூறியிருப்பதை வரவேற்றாலும், தமிழக வெற்றி கழக அரசு சில விஷயங்களில் திமுக ஆட்சி 2.0 போல் செயல்படுகிறது. மேகதாது அணை மற்றும் காவிரி நீர் பிரச்சினை குறித்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரை சுத்திகரித்து அனுப்ப வேண்டும் அல்லது கழிவுநீர் கலப்பை முழுமையாக தடுக்க வேண்டும்.

ரசிகர் மனநிலை

தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இன்னும் ரசிகர் மனநிலையிலேயே உள்ளனர். அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாக செயல்படும் பொறுப்புணர்வு வளர வேண்டும். கலப்பு திருமணங்களுக்கு வழங்கப்படும் 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் நிதியுதவி குறித்து கேள்வி எழுப்பிய அவர், சாதி ஒழிக்கப்பட வேண்டுமெனில் சலுகை பெறுபவர்கள் சாதியற்றவர் என்ற சான்றிதழ் பெறும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதைப்பொருள்

போதைப்பொருள் பயன்பாடு கடந்த ஐந்து ஆண்டுகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. அதை ஒழிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இதற்காக பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களே போதைக்கு எதிரான விழிப்புணர்வை முன்னெடுக்க வேண்டும்.

தேசிய விருதுகள்

மேலும், ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களுக்கும் தணிக்கைச் சான்றிதழ் கட்டாயமாக்க வேண்டும் .தேசிய திரைப்பட விருதுகள் உள்ளிட்ட விருதுகள் வழங்கும் முறையில் வெளிப்படைத்தன்மை தேவை. தேசிய விருதுகள் சரியானவர்களுக்கு வழங்கப்படுவதில் குறைபாடுகள் இருக்கிறது. சமீபத்தில் கூட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டதில் பலரும் அதிருப்தியில் தான் உள்ளனர்" என்றார் இயகுநர் மோகன் ஜி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+