ரியல் எஸ்டேட் ட்விஸ்ட்! சென்னையில் வீடு வாங்குவோருக்கு குட் நியூஸ்.. சதுரடி ரூ.100 வரை விலை குறைவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த காலங்களில் கட்டிட அனுமதிகளுக்கு "கட்சி நிதி'" என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட தேவையற்ற லஞ்ச கட்டணத்தால் வீடுகளின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்தன. இப்போது அந்த சட்டவிரோத வசூலுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.. இதனால் புதிய வீடுகளின் விற்பனை விலை சதுரடிக்கு ரூ.100 வரை குறையும் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு வாழ்நாள் கனவாகும்.. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நிலங்களின் மதிப்பும், கட்டுமான பொருட்களின் விலையும் அதிகமாகவே உயர்ந்துவிட்டன.

Real Estate

அத்துடன் புதிய வீடுகளின் இறுதி விற்பனை விலையும் அதிகமாக உயர்ந்தது.. அதனாலேயே சொந்தமாக வீடு வாங்க நினைத்த பல சாமானிய மக்களின் ஆசை நிறைவேறவேயில்லை..

கட்டுமான துறையில் வசூல்

இப்படிப்பட்ட சூழலில்தான், கட்டுமான துறையில் நிலவிவந்த புகார்களுக்கும், சிக்கல்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி தற்போது வைக்கப்பட்டுள்ளது..

பொதுவாக சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்த சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சிஎம்டிஏ அமைப்பிடமும், பிற மாவட்டங்களில் நகர் ஊரமைப்பு துறையான டிடிசிபி அமைப்பிடமும் முறைப்படி கட்டுமான திட்ட அனுமதி பெற வேண்டும்..

கட்டுமான நிறுவனங்கள் அனுமதி கேட்டு அரசு அலுவலகத்தில் மனு கொடுக்கும். அந்த மனுக்கள் அதிகாரிகள் பரிசீலனையில் இருக்கும்போதே, அதில் உள்ள தகவல்களை அரசியல் செல்வாக்கு உள்ள சில நபர்கள் கசிய விடுவார்கள்.

கட்சி நிதி வசூல் கூடாது

அதன் பிறகு, சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனங்களை அணுகி, "கட்சி நிதி" என்ற பெயரில் குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என சிலர் வலியுறுத்தியதாக புகார்கள் எழுந்தன. இல்லாவிட்டால் கட்டிட அனுமதி தொடர்பான கோப்புகள் தாமதப்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இந்த விவகாரம் பல ஆண்டுகளாகவே தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதாவது சதுரடிக்கு ரூ.27 முதல் ரூ.35 வரை இப்படியான கட்சி நிதியாக வசூலிக்கப்பட்டதாகவும், இந்த நிபந்தனைக்கு சம்மதிக்காத நிறுவனங்களின் கட்டட அனுமதி கோப்புகள் எந்த காரணமும் இல்லாமல், காலவரையன்றி நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் புகார்களும் எழுந்தவண்ணம் இருந்தன.. இதனால் கட்டுமான நிறுவனங்கள் கொடுக்கும் இந்த கூடுதல் செலவுத் தொகையானது, மக்களையே பாதித்தது.

வீடுகள் விலை சென்னையில் குறையும்

வீடுகளை கட்டும் நிறுவனங்கள், தங்களுக்கு ஏற்படும் இந்த லஞ்ச செலவையும் சேர்த்தே வீடுகளின் விலையை தீர்மானித்தன. இதனால் வீடுகளின் விலை சாதாரணமாக இருக்க வேண்டியதை விட மிக அதிகமாக உயர்ந்து, ஒருகட்டத்தில் எளிய மக்களால் வாங்க முடியாத நிலைக்கு சென்றது. இதற்குதான் தற்போதைய தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளது.. இனி கட்டிட அனுமதி தரும்போது யாரிடமும் நிதி என்ற பெயரில் பணம் வசூலிக்கக் கூடாது என்று அரசு உத்தரவை போட்டுள்ளது.

அரசுக்கு கிரெடாய் பாராட்டு

அரசின் இந்த நல்ல முடிவை கட்டுமான சங்கங்களான "கிரெடாய்" மற்றும் இந்திய கட்டுமான வல்லுநர் சங்கம் ஆகியவை வரவேற்றுள்ளன. "தேவையில்லாத இந்த கூடுதல் செலவு மிச்சமானதால், அந்த பயனை வீடு வாங்கும் மக்களுக்கு கொண்டு சேர்ப்போம்" என்று கட்டுமான நிறுவனங்களும் உறுதியளித்துள்ளன.

இதன் மூலம், இனி வரப்போகும் புதிய அடுக்குமாடி வீடுகளின் விலை சதுரடிக்கு 100 ரூபாய் வரை குறைய அதிக வாய்ப்புள்ளது. அப்படியானால் ஒரு வீட்டின் மொத்த விலையில் சில லட்சங்கள் வரை நிச்சயம் குறையக்கூடும். அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சொந்தமாக வீடு வாங்க ஆசைப்படும் சராசரி மக்களின் கனவு நனவாவதுடன், ரியல் எஸ்டேட் தொழிலும் மீண்டும் விறுவிறுப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+