சென்னையில் புதிதாக வீடு வாங்குவோர் ஒரு விஷயத்தில் சமரசம் செய்துடாதீங்க.. 3 மாதத்தில் சிக்கல் வரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிதாக வீடு வாங்குவோர் கழிவு நீர் கால்வாய் விவகாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். டிடிசிபி அப்ரூவல் பிளாட்டுகளை பொறுத்தவரை கழிவு நீர் கட்டமைப்பு கட்டாயம் இருக்க வேண்டும். நல்ல சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் போன்ற வசதிகள் இருக்க வேண்டும். அப்படி கழிவுநீர் கால்வாயை ஒரு வீட்டிற்காக கொணடு செல்ல முடியாது. உங்களுக்கு சம்ப் போட்டு தருகிறோம் என்றால், அதனை எந்த காரணம் கொண்டும் ஏற்காதீர்கள்.. ஏனெனில் கழிவு நீர் கால்வாய் இல்லாவிட்டால் வெறும் 3 மாதத்தில் நீங்கள் நிம்மதியை இழப்பீர்கள்.

புதிதாக வீடு வாங்குவோர், வீடு கட்டித்தரும் நிறுவனம் எப்படிப்பட்டது, அந்த நிலம் யாருடையது, சரியான அனுமதி அரசிடம் பெற்றுள்ளார்களா, பட்டா பெற வில்லங்கம் வருமா என பல்வேறு விஷயங்களை மிகவும் கவனமாக பார்க்கிறார்கள். ஆனால் சிலர் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தாலும், கழிவு நீர் கால்வாய் விவகாரத்தில் தவறான முடிவெடுக்கிறார்கள்.

First-time Chennai homebuyers do not compromise when it comes to the sewage drainage system

சில பில்டர்கள், இப்போது தான் வளரும் பகுதி, உங்கள் வீடு வளர்ந்த பிறகு கழிவு நீர் கால்வாய் அரசே அமைத்து தரும் என்று கூறுகிறார்கள். அத்துடன் தற்காலிக தீர்வாக சம்ப் அமைத்து தருகிறார்கள். அது வெறும் 3 மாதங்கள் கூட தாங்குவது இல்லை.. நிறைந்து வழிந்துவிடுகிறது.. இறுதியாக வீடு வாங்கியவர்கள் தங்களுக்குள் சாக்கடை பிரச்சனைக்காக சண்டை போடும் நிலை ஏற்படுகிறது.. இந்த சண்டை பெரிய பிரச்சனையாகி வீடு ஏன்டா வாங்கினோம் என்கிற நிலைக்கு அவர்களை தள்ளிவிடுகிறது

எனவே புதிதாக வீடுவாங்குவோர் பில்டர்களிடம் கழிவு நீர் கால்வாய் முறையாக வீடுகளுக்க அமைத்து தர கூறுங்கள். அப்படிஅமைத்து தர முடியாது என்று கூறினால், அந்த வீட்டை எந்த காரணம் கொண்டு வாங்கிவிடாதீர்கள்.. சம்ப் எப்போதுமே நிரந்தர தீர்வு இல்லை.. அதேபோல் வீடு கட்டி குடியேறும் இடத்திற்கு செல்லும் சாலையும் முறையாக உள்ளதாக என்பதை பாருங்கள். சில இடங்களில் சரியான பாதை வசதியே இருக்காது. தனியார் பாதை வழியாக சென்றால் எளிதாகஇருக்கும். ஆனால் உண்மையான பாதை நீண்ட தூரம் சுற்றிச்செல்லும் நிலையும் இருக்கும். தனியார் பாதை என்று அறியாமல் சென்று இடம் வாங்கி வீடு கட்டிவிடுகிறார்கள்.

பின்னாளில் சரியான பாதை வசதி இல்லை.. நீண்ட தூரம் சுற்றி செல்லும் நிலை வந்த பின்னர் அவஸ்தை படுகிறார்கள். அதேபோல் சிலர் அப்பார்ட்மெண்ட் வாங்கும் போது, தண்ணீர் அந்த பகுதியில் தேங்குமா அல்லது அந்த இடத்தில் கழிவு நீர் வசதி முறையாக உள்ளதா,மழைநீர் அதிகமாக வந்தால் வெளியே வழி உள்ளதா என்பதையும் பார்ப்பத இல்லை... இதனாலும் பெரிய அவஸ்தைக்கு உள்ளாகிறார்கள்.

தாம்பரம் பகுதியில் கோடிகளில் வீடு வாங்கியவர்கள் 2023ம் ஆண்டு பெரிய அளவில் அவதிப்பட்ட செய்திகளையும் பார்த்திருப்பீர்கள். எனவே கழிவு நீர், மழைநீர் எப்படி போகும். உங்கள் வீடு மழைநீர், கழிவு நீர் செல்லும் பாதையில் உள்ளதா, சரியான முறையில் சாலை அமைத்துள்ளார்களா.. சாலை உங்கள் வீட்டின் பாதையில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ளதா என பல விஷயங்களை கவனமாகபாருங்கள்.. ஏனெனில் இந்த பிரச்சனை தான் சென்னை சுற்றுவட்டாரங்களில் பெரும் தொல்லையாக இன்று இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+