த்ரிஷ்யம் இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் Valathu Vashathe Kallan ஓடிடியில் வந்தாச்சு.. இதோ விமர்சனம்
சென்னை: ஜீத்து ஜோசப் இயக்கத்தில், பிஜு மேனன் மற்றும் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி, தற்போது தமிழ் டப்பிங்குடன், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படமான 'வலது வஷத்தே கள்ளன்' (Valathu Vashathe Kallan) திரைப்படத்தின் விமர்சனம் (Review) இதோ:

கதைக்களம் (Plot)
திரிஷ்யம் புகழ் இயக்குநரான ஜீத்து ஜோசப் பாணி த்ரில்லர் படங்களைப் போலவே இதிலும் குடும்ப சென்டிமென்ட் சார்ந்த கதைக்களம் உள்ளது. இன்ஸ்பெக்டர் ஆண்டனி சேவியர் (பிஜு மேனன்) மற்றும் சாமுவேல் ஜோசப் (ஜோஜு ஜார்ஜ்) ஆகிய இருவருக்கும் இடையேயான ஒரு எலி-பூனை ஆட்டமே படத்தின் முக்கியக் கதை. ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தால் தமிழ் ரசிகர்கள் பலருக்கும் பரிட்சையமான ஆண்டனி இதில், நெகட்டிவ் ஷேடில் நடித்து இருக்கிறார். கெட்டவர்களுக்கு உடந்தையாக செயல்படும் போலீசாகவும், மகனை ஒழுங்காக வளர்க்காமல் நடந்து கொள்ளும் தந்தையாகவும், மாறுபட்ட கோணங்களை இயல்பாக நடிப்பில் காட்டியுள்ளார்.
பாசிட்டிவ்கள்
ஜீத்து ஜோசப்பின் இயக்கம்: ஜீத்து ஜோசப், இதில் பெற்றோர்-குழந்தைகள் உறவின் முக்கியத்துவத்தையும், த்ரில்லர் கதையையும் மிக நேர்த்தியாகக் கலந்து கொடுத்துள்ளார். முதல் பாதியில் இருந்தே படம் வேகம் பிடித்துவிடுவதால், இதை வழக்கமான மலையாளப் படமாக கருத முடியாது.
பிஜு மேனன் & ஜோஜு ஜார்ஜ் நடிப்பு: பிஜு மேனன் மற்றும் ஜோஜு ஜார்ஜ் இருவருமே டாப் கிளாஸ் நடிகர்கள். இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து நின்று கேம் ஆடும் காட்சிகள் அப்ளாஸ் அள்ளுகின்றன. இருவருமே ஒரே மாதிரி புத்திக் கூர்மை உள்ளவர்கள் என்று வடிவமைக்கப்பட்டுள்ளது படத்தின் சுவாரசியத்தை கூட்டுகிறது. பிஜு மேனன், தன்னைப்போலவே புத்திசாலி என ஜோஜு ஜார்ஜ் ஒரு காட்சியில் சொல்லியிருப்பது படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்கு பக்காவாக லீடு கொடுத்துள்ளது.
விறுவிறுப்பான திரைக்கதை: திரைக்கதையாசிரியர் தினு தாமஸ் ஈலன், பார்வையாளர்களை அடுத்த என்ன நடக்கும் என்று யூகிக்க வைத்துள்ளார். குறிப்பாக, இடைவேளைக்கு முந்தைய காட்சிகளும், இரண்டாம் பாதியில் வரும் எதிர்பாராத திருப்பங்களும் த்ரில்லர் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த விருந்து என்றே சொல்லலாம்.
பின்னணி இசை & ஒளிப்பதிவு: விஷ்ணு ஷியாமின் பின்னணி இசை பல காட்சிகளுக்குப் பெரும் பலமாக அமைந்து, பதற்றமான சூழலைத் திரையில் அற்புதமாகப் பிரதிபலிக்கிறது. ஒளிப்பதிவுவும், படத்திற்குத் தேவையான ஒரு க்ரைம் த்ரில்லர் உணர்வை சரியாகக் கொடுத்துள்ளது. லொகேஷன் தேர்வும் சிறப்பாக உள்ளது. லொகேஷனின் குளிரை பார்ப்பவர்களுக்கு கடத்துகிறது.
ஜீத்து ஜோசப் பாணி சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்டுகளை விரும்பும் ரசிகர்களுக்கு "வலது வஷத்தே கள்ளன்" படம் நிச்சயம் ஏமாற்றம் தராது. உணர்வுப்பூர்வமான காட்சிகளும், விறுவிறுப்பான திரைக்கதையும் நிறைந்த ஒரு தரமான க்ரைம் த்ரில்லர் திரைப்படம். கண்டிப்பாக இது ஸ்பாய்லர் இல்லை, ஆனாலும் ஒன்று சொல்கிறோம்.. கிளைமேக்ஸ் காட்சி பிஜு மேனன் ரசிகர்களுக்கும் திருப்தியளிக்கும் வகையில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications