தள்ளிப்போகிறது தமிழகத்தில் பாஜகவின் மெகா கூட்டணி ஆலோசனை.. காரணம் என்ன தெரியுமா?
லோக் சபா தேர்தலுக்காக தமிழகத்தில் பாஜக நடத்த இருந்த கூட்டணி பேச்சுவார்த்தை தள்ளிப்போய் உள்ளது.
சென்னை: லோக் சபா தேர்தலுக்காக தமிழகத்தில் பாஜக நடத்த இருந்த கூட்டணி பேச்சுவார்த்தை தள்ளிப்போய் உள்ளது.
லோக் சபா தேர்தல் பரபரப்பு தற்போது தமிழகத்திலும் தொற்றிக்கொண்டு இருக்கிறது. லோக் சபா தேர்தல் வரும் மே மாதத்தில் நடக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.
தமிழகத்தில் பாஜக பெரிய கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் விரைவில் நடக்க உள்ளது.

என்ன திட்டம்
லோக் சபா தேர்தலுக்காக பாஜக வரும் ஜனவரி 18ம் தேதியில் இருந்து தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்த இருந்தது. பாஜக சார்பாக மூத்த உறுப்பினர் பியூஸ் கோயல் மற்றும் சிடி ரவி தமிழகம் வருவதாக இருந்தது. ஆனால் தற்போது இது தள்ளிப்போய் இருக்கிறது.

20ம் தேதி தான் பேச்சுவார்த்தை
இவர்கள் தமிழகத்திற்கு 20ம் தேதிதான் வருவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அன்றே அதிமுகவினருடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அன்று பியூஸ் கோயல் மற்றும் சிடி ரவி தமிழக முதல்வரை சந்திக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் இந்த தேதியும் உறுதியாக கூறப்படவில்லை.

என்ன காரணம்
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உட்பட பல முக்கிய தலைவர்கள் உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் பாஜகவில் பல முக்கிய ஆலோசனைகள் செய்யப்படாமல் உள்ளது. இதனால் தற்போது இவர்கள் தமிழகம் வரும் திட்டம் தள்ளிப்போய் இருப்பதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு மீட்டிங்
முதற்கட்ட சந்திப்பில் பாஜக அதிமுக மற்றும் பாமகவுடன் ஆலோசனை நடத்தும். அதன்பின் வேறு ஒரு நாள், இரண்டாம்கட்ட சந்திப்பில் தமிழ்மாநில காங்கிரஸ் மற்றும் தேமுதிமுகவுடன் பாஜக ஆலோசனை செய்யும். தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்தியாவில் இல்லாததால் இந்த சந்திப்பு தள்ளிப்போய் இருக்கிறது.












Click it and Unblock the Notifications