ஆளூர் ஷாநவாஸுக்கு பாஜக நிர்வாகி கொலை மிரட்டல்.. இரவோடு இரவாக உள்ளே புகுந்த போலீஸ்.. அதிரடி கைது
சென்னை: விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸுக்கு பாஜக நிர்வாகி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நபர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தமிழக சட்டசபை திமுக கூட்டணி 159 இடங்களில் மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அரசு வரும் வெள்ளிக்கிழமை பதவி ஏற்கிறது.
திமுக கூட்டணியில் இடம்பெற்று இருந்த விசிக 2 பொதுத்தொகுதி உட்பட 4 தொகுதிகளில் வென்றது. திமுக கூட்டணியில் விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் நாகை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

எப்படி
இந்த நிலையில் ஆளூர் ஷாநவாஸுக்கு பாஜக நிர்வாகி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை பாஜக இளைஞரணியைச் சேர்ந்த நிர்வாகி, பாஜகவின் இளைஞரணி பக்கத்தில் இந்த மிரட்டலை வெளிப்படையாக விடுத்தார். அதில், தமிழகத்தில் 4 தொகுதிகளில் பாஜக வென்றுவிட்டது.

பாஜக
தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது. இதற்காக உழைத்த அனைத்து பாஜக நிர்வாகிகளுக்கும் நன்றி. தமிழகத்தில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் வகையில் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினர் எல்லோருக்கும் விரைவில் வெற்றி பரிசாக ஆளூர் ஷாநவாஸின் மரண செய்தி வரும் என நினைக்கிறேன், என்று சர்ச்சைக்குரிய வகையில் குறிப்பிட்டு இருந்தார்.

சர்ச்சை
தஞ்சை பாஜக இளைஞரணியின் பேஸ்புக் பக்கத்தில் வெளியான இந்த போஸ்ட் பெரிய அளவில் சர்ச்சையானது. வெளிப்படையாக சமூக வலைத்தளங்களில் எம்எல்ஏ ஒருவருக்கு எதிராக பாஜகவினர் இப்படி கொலைமிரட்டல் விடுத்த செய்தி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பெரிதான நிலையில் பாஜக நிர்வாகி மீது தஞ்சை மாவட்ட காவல்துறை பல்வேறு வழக்குகளின் கீழ் பதிவு செய்தது.

வழக்கு
கொலை மிரட்டல், வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டன. இதையடுத்து நேற்று இரவோடு இரவாக அந்த பாஜக நிர்வாகி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். தவறுதலாக போஸ்ட் செய்துவிட்டேன், நான் யாருக்கும் கொலை மிரட்டல் விடுக்கவில்லை என்று அந்த நபர் போலீசார் விசாரணையில் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications