பட்டையைக் கிளப்பும் பாஜக காந்தி.. தொகுதியில் செம பிஸி.. வளைத்து வளைத்து பணியாற்றி அசத்தல்!
நாகர்கோவிலில் எம்ஆர் காந்தியின் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்து வருகிறது
சென்னை: பாஜக எம்எல்ஏ காந்தியின் செயல்பாடுகள் தொகுதிக்குள் மட்டுமல்லாமல், கட்சிக்குள்ளும் உற்று நோக்க வைத்து வருகின்றன..!
இளைஞர்கள் தலையெடுப்பு இன்றைய அரசியலில் அதிகமாகி வரும் அரசியலில்.. 75 வயசில் ஒருத்தர் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயம் இல்லை.
அதுவும், இந்து, கிறிஸ்தவ சமுதாயத்தின் வாக்குகள் சரிவிகிதமாக உள்ள நாகர்கோவில் தொகுதியில் பாஜக வெற்றிபெறுவது என்பதும் அவ்வளவு எளிது கிடையாது. இதை தன்னுடைய எளிமை, உழைப்பு, அர்ப்பணிப்பால் முறிடியத்து வெற்றி பெற்றவர்தான் காந்தி.

எளிமை
எப்போதுமே தேர்தல் என்றாலும், கன்னியாகுமரியை பாஜகவின் மண் என்பார்கள்.. அதற்கான விதையை அன்று போட்டு தந்தவர்தான் இந்த காந்தி.. பாஜக தவிர அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்படுபவர்.. பாஜகவில் இப்படி ஒரு எளிமைவாதியா? என்பது ஆச்சரியப்படும் அளவுக்கு அநியாயத்துக்கு எளிமையாக இருப்பார்.

காஸ்ட்லி கார்
காலில் செருப்பு கூட போடமாட்டார்.. வெள்ள, மழை சேதத்தை பார்வையிடுவதாக இருந்தாலும் சரி, சட்டசபைக்கு வருவதானாலும் சரி, காலில் செருப்பு இருக்காது.. எப்போதுமே வெள்ளை சட்டை, வேட்டி.. சில சமயம், அந்த டிரஸ்ஸூம் கசங்கிபோய்தான் இருக்கும்.. ஆனால், பதவியேற்ற அன்றைய நாளில் மட்டும் ஒரு காஸ்ட்லி காரில் வந்திறங்கினார்.. காந்தியா? காஸ்ட்லி காரிலா? என்று எல்லாரும் ஆச்சரியமாக பார்த்தார்கள்.. ஆனால், அது அவருடைய கார் இல்லை என்பது எல்லாருக்குமே தெரியும்.

கோரிக்கை
இப்போது 2 விதமான செய்திகள் கசிந்து வருகிறது.. காந்தி கொஞ்சம் நேரம்கூட சும்மா இருப்பதில்லையாம்..
தொகுதியில் என்ன பிரச்சனை என்றாலும் சரி, எப்போது வேண்டுமானாலும் காந்தியை அணுகலாம் என்ற நம்பிக்கை மக்களுக்கு எப்போதுமே இருப்பதால், எந்நேரமும் கோரிக்கையுடன் அவரை நோக்கி சென்று வருகின்றனராம்.

மக்கள் நலன்
எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்ட மறுநாளில் இருந்தே காந்தியும் அதிரடியில் இறங்கிவிட்டார்.. நலத்திட்ட பணிகள், அறிவிப்புகள், மக்கள் நலன் என தினமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை அறிவித்து கொண்டே இருக்கிறாராம்.. தொகுதியில் ஏதாவது பிரச்சனை என்றால், நேரடியாகவே சென்று என்ன, ஏதென்று கவனிக்கிறாராம்.

சான்ஸ்
கன்னியாகுமரியின் முக்கிய பாஜக முகமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எம்ஆர் காந்தி சீனியர் என்றாலும், கட்சி செயல்பாடுகளில் மிகவும் குறைவுதான்.. கிட்டத்தட்ட 30 வருஷமாகவே காந்திக்கு பெரிய பதவி, பொறுப்பு எதுவுமே தரப்படவில்லை.. 30 வருடம் கழித்து காந்திக்கு ஒரு சான்ஸ் கிடைத்துள்ளதால், அதை சரியாக பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்..மொத்தத்தில் காந்தி, கலக்கி கொண்டிருக்கிறார்.. பாஜகவுக்கும் நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்!












Click it and Unblock the Notifications