தியாகி மாதிரி வேஷம்.. இது பெருமையா? டாக்டர் ஷர்மிளா பதிவு.. பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி
சென்னை: நடிகை கஸ்தூரியும் டாக்டர் ஷர்மிளாவும் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் சண்டையிட்டுக்கொண்டுள்ளனர். தெலுங்கானா மாநில எம்எல்ஏ தனது வீட்டை இடித்தது குறித்து நடிகை கஸ்தூரி எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டதற்கு கமெண்ட் செய்தார் ஷர்மிளா. அவரது கிண்டல் பதிவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் கஸ்தூரி.
தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கமா ரெட்டி தொகுதியில் முதல்வர் வேட்பாளர்கள் இருவரும் போட்டியிட்டனர். பிஆர்எஸ் கட்சியின் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான சந்திரசேகர ராவும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளரான ரேவந்த் ரெட்டியும் போட்டியிட்டனர்.

அவர்களை எதிர்த்து பாஜக சார்பில் கடிபள்ளி வெங்கட ரமண ரெட்டி கமா ரெட்டி தொகுதியில் போட்டியிட்டார். இதில் முதல்வர் வேட்பாளர்கள் இருவரையும் வீழ்த்தி வெற்றி கனியை பறித்தார் கேவிஆர் என அழைக்கப்படும் கடிபள்ளி வெங்கட ரமண ரெட்டி
முதல்வர் வேட்பாளர்ளை பாஜக வேட்பாளரான கேவி ரமணரெட்டி தோற்கடித்தது தெலுங்கானாவில் பேசு பொருளானது.
இந்நிலையில் நகர மாஸ்டர் பிளானின் ஒரு பகுதியாக கமாரெட்டி பேரூராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக வட்லூர் சாலையில் உள்ள தனது வீட்டை பாஜக எம்எல்ஏ கேவி ரமணா ரெட்டி கடந்த சனிக்கிழமை இடித்தார்.
பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து வட்லூர் கிராமம் வரை 80 அடி ரோடு அமைக்க வேண்டும். ஆனால் இந்த சாலையில் ஏராளமான ஆக்கிரமிக்கப்பட்ட வீடுகள், கட்டிடங்கள் உள்ளதாக கூறப்பட்டது. அதில் பாஜக எம்.எல்.ஏ.வின் வீடும் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இதையடுத்து பாஜக எம்எல்ஏ கேவி ரமண ரெட்டி, சாலை அமைக்க இடையூறாக இருந்த தனது வீட்டை புல்டோசர்களை கொண்டு இடித்தார். இந்த விஷயம் பெரிதும் பேசப்பட்டது. நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்திருந்தார்.
கஸ்தூரி தனது பதிவில், நம்புகிறீர்களோ இல்லையோ! தெலுங்கானா பாஜக எம்எல்ஏ கேவி ரமணா ரெட்டி சாலை அமைக்க தனது சொந்த வீட்டை இடித்துள்ளார். என்ன ஒரு மனிதன்! ரேவந்த் ரெட்டி மற்றும் கே.சி.ஆர் இருவரையும் அவர் சட்டசபை தேர்தலில் வென்றதில் ஆச்சரியமில்லை! என குறிப்பிட்டிருந்தார்.
இதனை பார்த்த டாக்டர் ஷர்மிளா, ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடிச்சிருக்காங்க…இதுல என்ன பெருமை? அரசு இடிச்சா அசிங்கம்னு முந்திகிட்டு… ஏதோ தியாகி மாதிரி வேஷம் போட வேண்டியது … இதுக்கு What a man!என கஸ்தூரியின் பதிவை ரீடிவீட் செய்து பதில் அளித்திருந்தார்.
ஷர்மிளாவின் இந்த பதிவை பார்த்த நடிகை கஸ்தூரி, எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் பட்டா மோசடி எல்லோருக்கும் கைவருமா? நிலத்தை அபகரித்து ஏரியை ஆக்கிரமித்து ஆஸ்பத்திரி, கல்லூரி, பள்ளி, ஹோட்டல் என்று கட்டி சட்டம் நெருங்கினால் வயசாயிடிச்சு, நெஞ்சுவலி என்று சொல்லும் திருடர்களுக்கு வலிய சென்று விதிமீறலை திருத்திக் கொள்வதெல்லாம் புரியாது என்று பதிலடி கொடுத்துள்ளார் கஸ்தூரி.
நடிகைகள் கஸ்தூரி, ஷர்மிளாவின் சமூக வலைத்தள சண்டை தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இருவரின் எக்ஸ் வலைத்தள பதிவிற்கும் நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications