பாஜக கூட்டணி மோதலுக்கு நடுவே.. நயினார் நாகேந்திரனின் அண்ணன் அதிமுகவில் இணைகிறார்?
சென்னை: அதிமுக - பாஜக இடையே கூட்டணி விவகாரத்தில் மோதல் நீடித்து வரும் நிலையில், இன்று அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனின் சகோதர் அதிமுகவில் இணைய உள்ளார். இதேபோல் தென்காசி முன்னாள் எம்பி வசந்தி முருகேசன் அதிமுகவில் இணைகிறார்.
அதிமுக - பாஜக கூட்டணி இடையே மோதல் நிலவி வருகிறது. இதில் அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பிரஸ்மீட்டில் அழுத்தி கூறினார். இருந்தாலும் இந்த விவகாரத்தில் எடப்பாடி மவுனம் காப்பதை சுட்டிக்காடி பாஜகவில் உள்ள சில தலைவர்கள் பேசி வருகின்றனர்.

இத்தகைய பரபரப்புமிக்க சூழலில் தான் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்றும் கூட்டணி பற்றி முடிவு எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் கூறப்படுகிறது.
பாஜக கூட்டணி முறிவு குறித்து அதிமுக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்குமா? அல்லது இந்த விவகாரத்தில் சற்று ஆறப்போட்டு முடிவு எடுக்குமா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏவும் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரனின் அண்ணன் நயினார் வீரபெருமாள் இன்று அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்காசி முன்னாள் எம்.பி வசந்தி முருகேசனும் இன்று அதிமுகவில் இணைய உள்ளனர். பாஜக - அதிமுக கூட்டணி இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நயினார் நாகேந்திரனின் சகோதர் நயினார் வீர பெருமாள் அதிமுகவில் இணைய உள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிமுகவின் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்த நயினார் நாகேந்திரன் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாஜகவில் சேர்ந்தது கவனிக்கத்தக்கது. இதே போல், தென்காசி முன்னாள் எம்பி வசந்தி முருகேசன் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications