'கணித வல்லுநர்’ பத்ரி சேஷாத்ரி கைது பாசிச நடவடிக்கை- கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்
சென்னை: கணித வல்லுநரும் கிழக்கு பதிப்பக உரிமையாளருமான பத்ரி சேஷாத்ரி, கருத்து தெரிவித்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டு பாசிச நடவடிக்கை என விமர்சித்துள்ளார் தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்.
இது தொடர்பாக வானதி சீனிவாசன் கூறியதாவது: கிழக்கு பதிப்பக உரிமையாளரும், எழுத்தாளருமான திரு. பத்ரி சேஷாத்ரி இன்று (29-7-2023) அதிகாலையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக யூ-டியூப் சேனல் ஒன்றில் பேசியதற்காக கைது செய்யப்பட்டிருப்பதாக அறிகிறேன். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இம் என்றால் சிறைவாசமா?: திமுக அரசின் தவறுகளை, அடக்குமுறைகள் குறித்து யாரும் பேசிவிட, எழுதிவிடக் கூடாது என்பதற்காக, திமுக அரசை எதிர்ப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதற்காக சமூக ஊடகங்களில் கருத்து பதிவிடுபவர்களை எல்லாம் திமுக அரசு செய்து வருகிறது.
ஜனநாயகம், கருத்து சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை, தனி மனித உரிமை பற்றியெல்லாம் திமுகவினர் மற்றவர்களுக்கு வகுப்பெடுப்பார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து விட்டால், 'இம்' என்றால் சிறைவாசம். 'ஏன்?' என்றால் வனவாசம் தான்.
கணித வல்லுநர் பத்ரி: பேசுவதற்கு, எழுதுவதற்கு, சமூக ஊடகங்களில் கருத்து பதிவிடுவதற்கெல்லாம் கைது செய்யப்பட வேண்டுமெனில், திமுகவினரில் பெரும்பாலானோர் நிரந்தரமாக சிறையில் தான் இருக்க வேண்டும். பத்ரி சேஷாத்ரி அவர்கள், கிழக்கு பதிப்பகம் மூலம், தமிழ் பதிப்பக துறையில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டவர். கணிதத்தில் நிபுணரான அவர், கணிதம் தொடர்பாக தமிழில் பல புத்தகங்களை எழுதி இருப்பவர். சமூகத்தை பாதிக்கும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக துணிச்சலுடன் தனது கருத்துக்களை தெரிவித்து வருபவர். திமுகவுக்கு மாற்றான சிந்தனைகளை முன் வைக்கிறார்.
கைது- பாசிச நடவடிக்கை: திமுக அரசின் தவறுகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் என்பதனாலேயே அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது அப்பட்டமான அடக்குமுறை. ஜனநாயகத்துக்கு எதிரான பாசிச நடவடிக்கை. அடக்குமுறை மூலம் அரசுக்கு எதிரான குரலை ஒடுக்கி விடலாம் என்று நினைப்பது நடக்கவே நடக்காது. இது தொழில்நுட்ப யுகம். ஒவ்வொரு நொடியும் நடக்கும் உண்மைகளை மக்கள் அறிந்து கொண்டே இருக்கிறார்கள். பொய்களையும், புரட்டுகளையும் சொல்லி மக்களை இனி ஏமாற்ற முடியாது. எனவே, பாசிச நடவடிக்கைகளை கைவிட்டு பத்ரி சேஷாத்ரி அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications