ஸ்டைலா.. கெத்தா.. விஜயின் தீவிர ரசிகையா இவங்க? லியோ ட்ரைலரை ரசித்த வானதி சீனிவாசன்! பரவும் போட்டோ
சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்த நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கால்மேல் கால் போட்டு ஸ்டைலா.. கெத்தா.. லியோ டிரெய்லரை பார்த்து ரசித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‛லியோ'திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் உள்பட பலர் நடித்துள்ளனர்.

படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி மாஸ் வெற்றியை கொடுத்த லோகேஷ் கனகராஜ் 2வது முறையாக அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. இந்த திரைப்படத்தின் முதல் சங்கிளான ‛நான் ரெடி' பாடல் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதன்பிறகு சமீபத்தில் இப்படத்தின் மற்றொரு பாடலான 'Badass' வெளியானது.
இந்நிலையில் தான் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. மாலை 6 மணிக்கு தமிழகத்தில் உள்ள 1000 திரையரங்குகளில் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ரசிகர்கள் தியேட்டரில் குவிந்து கொண்டாடினர். லியோ திரைப்படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது அது அதிரடியான ஆக்சன் திரைப்படமாக ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 2.43 நிமிடம் ஓடும் ட்ரெய்லரில் போலீஸ், கிரிமினல் குறித்த குறிப்புகள், ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தான் பாஜக எம்எல்ஏவும், பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் நடிகர் விஜயின் லியோ திரைப்படத்தின் டிரெய்லரை ரசித்து பார்த்துள்ளார். இதுதொடர்பான போட்டோ இணையதளத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
அந்த போட்டோவின்படி வானதி சீனிவாசன் இன்று மாலையில் தனது வீட்டில் இருந்தபடி டிவியில் லியோ ட்ரெய்லரை பார்க்கிறார். அப்போது அவர் கால்மேல் கால் போட்டு கெத்தாக இருக்கிறார். இந்த போட்டோவை வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட நிலையில் அதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி












Click it and Unblock the Notifications