விக்ரம் வெற்றிக்களிப்பில் கமல்.. “அதை” வேற நியாபகப்படுத்திய வானதி! விவாதமான வாழ்த்து
சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தை பார்த்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கமல்ஹாசனை தேர்தலில் வீழ்த்தியது மகிழ்ச்சியளிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நிதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியானது.
விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.

விக்ரம் திரைப்படம்
கடந்த சில மாதங்களாகவே திரையரங்குகளில் வெளியான தமிழ் திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெறாத நிலையில், விக்ரம் திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது. தெலுங்கு திரைப்படமான RRR, கன்னட திரைப்படமான KGF உள்ளிட்டவற்றையே மிஞ்சும் அளவுக்கு விக்ரம் இருப்பதாக விமர்சனங்கள் வந்தன.

விக்ரம் பார்த்த வானதி
திரையரங்குகளில் ஒரு மாதம் கழித்தும் ரசிகர்கள் கூட்டத்துடன் விக்ரம் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் திரையரங்கில் விக்ரம் திரைப்படத்தை கண்டுகளித்தார். இதனை தொடர்ந்து விக்ரம் படத்தில் நடித்த நடிகர் கமல்ஹாசனுக்கு ட்விட்டரில் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்த்தா? கேலியா?
அதில், தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன். விக்ரம் திரைப்படம் பார்த்தேன். உங்கள் கலை பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்." என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். இது வாழ்த்துபோல் இருந்தாலும் அரசியல் ரீதியாக கமலை வானதி சீண்டியுள்ளார் என அவரது பதிவுக்கு கீழே பலர் கருத்திட்டுள்ளனர்.

கமல்ஹாசனின் தேர்தல் தோல்வி
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் களம் கண்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அக்கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. இதில் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குள் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசனும் கோவை தெற்கு தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசனில் பாஜவின் வானதி சீனிவாசனிடம் போராடி தோல்வியடைந்தார்.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி












Click it and Unblock the Notifications