கோவையில் தொடரும் வன்முறை.. சட்டசபையில் பேசவிடவில்லை.. வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
சென்னை: கோவையில் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்த நிலையில் அதை ஒரு விபத்து என்று மாநில அரசு கூறி வருவதாக கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தும் தங்களை பேச விடாமல் தடுப்பதாக கூறிய வானதி சீனிவாசன் பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்வதாக கூறினார்.
சட்டசபையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், கோவையில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு திட்டமிட்ட சதி செயல். இதில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்று தேசிய புலனாய்வு முகமை தங்களின் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு என்ஐஏவிற்கு மாற்றப்பட்டு தீவிரவாத தொடர்புகள் எல்லாம் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது. கோவையில் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கோவை இன்னும் கூட மத அடிப்படைவாதிகள் தீவிரவாதிகள் செயல்பாட்டிலேயே இருக்கின்ற காரணத்தினால் இம்மாதிரியான செயல்பாடுகள் கோவை மக்களின் அமைதியை பாதுகாப்பை பாதிக்கும் என நம்புகிறோம். இந்த விசயத்தில் அரசு மிகுந்த கவனத்தோடும் எச்சரிக்கை உணர்வோடும் இருக்கவேண்டும்.
எப்படி நீங்கள் ஒருபுறம் இஸ்லாமிய வாக்கு வங்கிக்காக நீங்கள் அரசியல் செய்கிறீர்களோ நாங்கள் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்காக அவர்களின் குரலை பதிவு செய்ய விரும்பி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தோம். வழக்கம் போல பேரவைத்தலைவர் அவர்கள் எங்களை பேச அனுமதிக்கவில்லை. அமைச்சர்களுக்கு பதிலாக சபாநாயகர் அப்பாவு பதில் அளிப்பதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications