அமித்ஷா பெயரை உச்சரித்த உதயநிதி.. அவைக்குறிப்பில் இருந்து நீக்க கோரி பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
சென்னை: சட்டசபையில் அமித்ஷா பெயரை குறிப்பிட்டு உதயநிதி பேசியதற்கு பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உதயநிதி பேசியதில் தவறேதும் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில் அவைக்குறிப்பில் இருந்து அமித்ஷா பெயரை நீக்க மறுப்பு தெரிவித்ததை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
செவ்வாய்க்கிழமையன்று சட்டசபையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி பேசினார். அப்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் எம்.எல்.ஏக்களுக்கு 400 பாஸ் வரை கொடுக்கப்பட்டது என்றும் தற்போது அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு மட்டும் பாஸ் கொடுக்கப்படுவதில்லை என்றும் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.
மானியக்கோரிக்கை விவாதத்தில் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிக்கு டிக்கெட் வேண்டும் என்று கேட்டிருந்தார். 4 வருஷமா மேட்ச் நடக்கவில்லை; நீங்கள் யாருக்கு எப்போது வாங்கி கொடுத்தீர்கள் என்று தெரியவில்லை.
4 ஆண்டுக்கு பிறகு தற்போது சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் மேட்ச் நடக்கிறது. நான் என் சொந்த செலவில் என் தொகுதியில் 150 பேரை கிரிக்கெட் போட்டியை பார்க்க வைக்கிறேன்.ஐபிஎஸ் போட்டியை பிசிசிஐ என்ற அமைப்பு நடத்துகிறது. உங்கள் நெருங்கிய நண்பர் அமித் ஷா இருக்காரே அவருடைய பையன் ஜெய்ஷாதான் அதற்கு 'ஹெட்'

நீங்கள் அவரிடம் பேசி நாங்கள் சொன்னால் கேட்கமாட்டார் நீங்கள் சொன்னால் கேட்பார். அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் 5 டிக்கெட் கொடுத்தாலும் போதும் நாங்கள் காசு கொடுத்து வாங்கி கொள்கிறோம் என்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சால் அவையில் பெரும் சிரிப்பலை ஏற்பட்டது. முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைவரும் சிரித்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் சட்டசபையில் அவைக்குறிப்பில் இருந்து அமித்ஷா பெயரை நீக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க ஸ்டாலின், உதயநிதி பேசியதில் தவறேதும் இல்லை என்றும் அப்படி இருந்தாலே நானே அமித்ஷா பெயரை நீக்க கூறியிருப்பேன் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் அமித்ஷா பெயரை நீக்காததை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் இருந்து நயினார் நாகேந்திரன் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
-
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications