முதல்வர் விஜய் திட்டங்களை ரத்து செய்வதையே ஒரு திட்டமாக செய்து வருகிறார்.. பாஜக கிண்டல் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசுஆட்சிக்கு வந்து 100 நாட்களை கடந்துவிட்டது. 60 ஆண்டுகளாக இருந்த திராவிட ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததை மறைமுகமாக பாராட்டி வந்த பாஜக, தற்போது, தவெக அரசின் செயல்பாடுகள், முதல்வர் விஜய்யின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் கடும் கோபம் அடைந்துள்ளது. பரந்தூர் விமான நிலையம் தொடங்கி, நாமக்கல் சிப்காட் வரை நிறைய திட்டங்களை தவெக அரசு ரத்து செய்துள்ளது. இதற்காக ஒரு கிண்டல் வீடியோவையே பாஜக வெளியிட்டுள்ளது. அண்மை காலத்தில் திமுகவைவிடவும் பங்கமாய் தவெக அரசை கலாய்த்து வருகிறது. அப்படியா ஒரு வீடியோ பற்றி பார்ப்போம்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, முந்தைய ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்காலத்திலிருந்த பல்வேறு முக்கிய திட்டங்களை ரத்து செய்துள்ளது. சில திட்டங்களை மாற்றி உள்ளது. சில திட்டங்களை கைவிட்டுள்ளது.

BJP mocks

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து

அதில் முதல் பெரிய திட்டம் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தான். சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கும் திட்டம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளார் முதல்வர் விஜய். விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளார். இந்த திட்டம் ரத்து காரணமாக சென்னைக்கு புதிய விமான நிலையம் அமைய இன்னும் 10 வருடங்களுக்கு மேல் ஆகும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையின் வளர்ச்சி மோசமாக பாதிக்கப்படும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையான எச்சரித்து வருகின்றன. மத்திய அரசிடம் கூடம் ஆலோசிக்காமல் அவசரமாக பரந்தூர் திட்டத்தை ரத்து செய்ததை பாஜகவும் ரசிக்கவில்லை. கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கம் - ரத்து

பரந்தூரிலேயே விமான நிலையம் அமையப்போவது இல்லை என்கிற நிலையில், எதற்காக பரந்தூர் வரை மெட்ரோ ரயில் பாதை என்று அந்த திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் கலங்கரை விளக்கம் தொடங்கி பூந்தமல்லி வரை பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. குறிப்பாக வடபழனி மற்றும் பூந்தமல்லி இடையே ரயில் ஓடப்போகிறது. இந்த சூழலில் பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை சுமார் 52 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயிலை நீட்டிக்க பிளான் இருந்தது. ஆனால பரந்துர் விமான நிலையம் ரத்து செய்யப்பட்டதால், வெறும் 28 கிமீ தூரம் வரை உள்ள சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ ரயில் நீடிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பரந்தூர் வரை மெட்ரோ ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பரந்தூர் வரை மெட்ரோ ரயில் மற்றும் விமான நிலையம் ஒருவேளை வந்திருந்தால், காஞ்சிபுரம் வரலாறு காணாத வளர்ச்சி பெற்று இருக்கும் என்றும், பின்தங்கிய அரக்கோணமும் நன்குவளர்ந்து இருக்கும் என்றும் ஆதங்கம் அங்குள்ள மக்களிடம் உள்ளது.

செம்மஞ்சேரி விளையாட்டு நகரம் - நிறுத்தப்பட்டது

சென்னை செம்மஞ்சேரியில் திமுக ஆட்சியில் அமைக்க திட்டமிட்ப்பட்ட 'குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி' திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக திமுக ஆட்சியில் இந்த விளையாட்டு நகரத்தின் முதல் கட்டப் பணிகளை மேற்கொள்ள RPP Infra நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. அதனை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. வெள்ளம் வரும் இடத்தில் இந்த விளையாட்டு நகரம் உள்ளதாகவும், எனவே ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற பிரம்மாண்டமான நிகழ்வுகளை நடத்தும் வகையில் இத்திட்டத்தை மறுவடிவமைப்பு செய்ய அரசு விரும்புவதாக கூறி ரத்து செய்துள்ளது தவெக அரசு.

ECR மேம்பாலம் ரத்து

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை திட்டமிடப்பட்டிருந்த ரூ.2,100 கோடி மதிப்பிலான உயர்மட்ட மேம்பாலச் சாலைத் திட்டம் கடந்த திமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்டிருந்தது. அதற்கான பணிகள் நடைபெற இருந்த நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ரத்து செய்துள்ளது. முறைகேடுகள் மற்றும் அதிக செலவை காரணம் காட்டி ரத்து செய்துள்ளது.

கிண்டி-வேளச்சேரி மேம்பாலம் ரத்து

கிண்டி - வேளச்சேரி மேம்பாலம் என்பது வேளச்சேரி பீனிக்ஸ் மால் பகுதியில் உள்ள குருநானக் கல்லூரியில் தொடங்கி வேளச்சேரி செக்போஸ்ட் தாண்டி நெரிசலான இடத்தில் அமைவதாக இருந்தது. ஆனால் இந்த திட்டத்தை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ரத்து செய்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடன் ஏற்பட்ட பாதை அமைப்பில் ஏற்பட்ட சிக்கலால் ரத்து செய்துள்ளது,

கோயம்புத்தூர் பெரியார் நூலகம் திறக்கப்படாமல் உள்ளது

சென்னையில் அண்ணா நூலகம் போல கோவை காந்திபுரத்தில் உள்ள அனுப்பர்பாளையம் பகுதியில் ரூ.300 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுரடி பரப்பில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டுள்ளது. நூலகம்பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது. திறப்பு விழா நடத்த தவெக அரசு தயாராக இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

கேள்விக்குறியான ஓசூர் டைடல் பார்க்

ஓசூர் அந்திவாடி மைதானம் அருகே ஓசூர் டைடல் பார்க் அமைக்க திட்டமிடப்பட்டது. சுமார் ரூ.400 கோடியில் தரைதளம் மற்றும் ஒன்பது தளங்களுடன், 5.50 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் இறுதியாகாமல் அப்படியே தேங்கிகிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் ஓசூர் அறிவுசார் வழித்தடம் திட்டமும் கேள்விக்குறியாகி உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. மேலும் கோயம்புத்தூர் கிரிக்கெட் மைதானம் திட்டமும் நடைபெறுமா என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.

காஞ்சிபுரம் புதிய நகர மேம்பாட்டுத் திட்டம்

2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் நகரமான காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள 18 கிராமங்களையும் 62.78 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் உள்ளடக்கிய ஒரு புதிய நகரத்தை அறிவித்து இருந்தது அத்துடன் 2025-2045 காலகட்டத்திற்கான விரிவான பாரம்பரிய மேம்பாட்டுத் திட்டத்தையும் வெளியிட்டிருந்தது. ஆனால் அந்த அறிவிப்பு முழுவதையும் ரத்து செய்து தவெக அரசு அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டது. காஞ்சிபுரம் உள்ளூர் திட்டக் குழுமப் பகுதிக்கான முதன்மைத் திட்டத்தை நகர மற்றும் ஊரமைப்பு இயக்ககம் தயாரிக்கத் தொடங்கி இருந்தது. ஆனால் அதே பகுதிக்குச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒரு புதிய நகர மேம்பாட்டுத் திட்டத்தைப் பரிந்துரைத்திருந்ததே இந்த ரத்து நடவடிக்கைக்குக் காரணம் என தவெக அரசு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+