சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊருல.. சட்டசபையில் தமிழை குழிதோண்டிப் புதைத்த ஜெகதீஸ்வரி! பாஜக அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாற்று திறனாளிகள் துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது அமைச்சர் ஜெகதீஸ்வரி தப்பு தப்பாக தமிழைப் படித்தது சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சங்கம் வளர்த்த தமிழ் மண்ணில் இன்று தமிழையே குழி தோண்டி புதைக்கும் வகையில் தலை காட்சி நடைபெறுகிறது என தமிழக பாஜக விமர்சித்துள்ளது.

2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று இருக்கும் நிலையில், தற்போது தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. கடந்த 5ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய போது அதே நாளில் பொது பட்ஜெட்டும், 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

Jagadeeswari BJP Tamil Nadu Assembly

பின்னர் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதமும் 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதம் நடத்தினர். விவாதத்தின் முடிவில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு அந்தந்தத் துறைகளின் அமைச்சர்களான மரிய வில்சனும், வினோத்தும் பதிலுரை வழங்கினர்.

தொடர்ந்து துறை ரீதியான மானிய கோரிக்கையை மீதான விவாதம் நடந்தது. பல்வேறு துறைகளில் சார்பில் மானிய கோரிக்கைகள் அறிவிக்கப்பட்டு உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பிறகு அமைச்சர்களின் பதிலுரையும் இடம் பெற்றது. அதில் அதிகம் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் அமைச்சர் ஜெகதீஸ்வரி. கடந்த 31ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் துறை தொடர்பான அறிவிப்புகளை அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்டார். அப்போது அவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் விவாத பொருளானது.

ஊடகத்தில் பணியாற்றியதாக சொன்ன ஜெகதீஸ்வரி தமிழை மிகவும் சிரமப்பட்டு படித்தார். வழக்கமாக அவர் பயன்படுத்தும் வார்த்தைகளையே தவறாக படித்தது ட்ரோல் செய்யப்பட்டது. குறிப்பாக பேரவை தலைவருக்கு பேரவை தலைவர் எனவும், அறிவிப்புகளுக்கு அருப்புகள், பதில் உரைக்கு பதிலோரை, தளபதியார் என்பதற்கு தளபவிதியார், அருமைக்கு அரிமை, பதிவுக்கு புதிவு, உயரம் குறைந்த என்பதற்கு உயரம் குறித்த, இல்லங்களுக்கு இலக்கங்கள் என சாதாரண வார்த்தைகளை கூட மிகவும் தட்டு தடுமாறி பேசினார்.

Jagadeeswari BJP Tamil Nadu Assembly

அதுவும் கையில் டைப் செய்யப்பட்ட அறிக்கையை வாசிப்பதற்கே மிகவும் தடுமாறியதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இந்த நிலையில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பேச்சை தற்போது அரசியல் கட்சிகளும் விமர்சிக்க தொடங்கி இருக்கின்றன.

குறிப்பாக தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ பக்கத்திலேயே அமைச்சர் ஜெகதீஸ்வியை கிண்டல் செய்து மீம் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்," சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணில், இன்று தமிழையே குழிதோண்டிப் புதைக்கும் வகையில் தவெக ஆட்சி நடைபெறுகிறது..!" என பதிவிடப்பட்டுள்ள வீடியோவை ஆயிரக்கணக்கானோர் லைக் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+