அதுக்குள்ள அவசரம்.. நயினார் நாகேந்திரன் "தில்" காரியம்.. அப்படியே மிரண்டு போன பாஜக.. !

பாஜகவின் நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நயினார் நாகேந்திரன் செய்த காரியத்தை கண்டு, பாஜகவே மிரண்டு போய் பார்த்து கொண்டிருக்கிறது.. இன்று ஒரே நாளில் தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்துவிட்டார் நயினார் நாகேந்தின்.

Recommended Video

    நெல்லை: வேட்பாளர் பட்டியல் அறிவிக்காத பாஜக... வேட்புமனு தாக்கல் செய்த நயினார் நாகேந்திரன்... பாஜகவில் குழப்பம்!

    தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் களம் களை கட்டி வருகிறது. அதிமுக, அதிமுகவுக்கு இணையாக பாஜகவும் மும்முரம் காட்டி வருகிறது.

    கடந்த சில நாட்களாகவே நெல்லை தொகுதியை கேட்டு கொண்டிருக்கிறார் நயினார் நாகேந்திரன்.. ஆனால், இந்த தொகுதியை அதிமுக தர மறுத்துள்ளது.. தங்களின் மாவட்ட செயலாளருக்கு அந்த தொகுதியை தரப்போவதாகவும் சொல்லி உள்ளது.

    டென்ஷன்

    டென்ஷன்

    இதனால், நயினார் ரொம்பவே டென்ஷன் ஆயிட்டாராம்.. நிறைய விஷயங்கள் பேசி, உறுதி அளித்ததால்தான் நான் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்தேன்.. இப்படித்தான் தமிழிசை கவர்னர் ஆனதும் தலைவர் பதவி தர்றதா சொன்னீங்க.. ஆனால் தரல.. அப்பறம் நெல்லையை தர்றதா சொன்னீங்க... இதை நம்பு 3 மாசம் இறங்க வேலை பார்த்துட்டேன்.. இப்ப திடீர்னு நெல்லையும் இல்லைன்னா எப்படி? என்று பாஜகவிடம் கேள்வி எழுப்பியதாகவும் செய்திகள் வந்தன.

    கூட்டணி

    கூட்டணி

    இப்போது திருநெல்வேலியில் இவர் போட்டியிட போகிறாரா? இல்லையா? என்பதெல்லாம் வேறு விஷயம்..
    அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி உள்பட அக்கட்சி போட்டியிடும் 20 தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன.. இந்த சூழ்நிலையில், இன்று திடீரென கிளம்பி போய் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டார் நயினார் நாகேந்திரன்.. இதில் என்ன ஒரு ஹைலைட் என்றால், பாஜக இன்னும் வேட்பாளர் லிஸ்ட்டையே வெளியிடவில்லை.. அதனால்தான் இந்த சம்பவத்தை ஆச்சரியத்துடன் அனைவரும் பார்த்து வருகின்றனர்.

    நெல்லை

    நெல்லை

    வேட்புமனுத் தாக்கல் இன்று துவங்கிய நிலையில், நெல்லையில் இன்று முதல் நாள் என்பதால் சுயேட்சை வேட்பாளர்கள் அல்லது வேறு யாராவது சிறிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வந்து மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் திடுதிப்பென்று பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் வந்துவிட்டார்.. வேட்பமனுவை தாக்கல் செய்யவும் பரபரப்பு ஏற்பட்டது. அவருடன் யாருமே வரவில்லை.. மகனை மட்டும் அழைத்து வந்திருந்தார்.

    லிஸ்ட்

    லிஸ்ட்

    பாஜக சார்பில் தயாரான வேட்பாளர் லிஸ்ட் டெல்லி போயுள்ளது.. அநேகமாக இன்று மாலை அல்லது நாளை காலை லிஸ்ட் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. அதற்குள் கட்சியின் மாநில துணைத் தலைவர் இப்படி எல்லாரையும் முந்திக்கொண்டு, வேட்புமனு தாக்கல் செய்திருப்பது பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+