Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெய்யாலுமே நாம் தமிழருக்கு பாஜக ஆதரவா? சீமானை கண்டித்தவுடன் ஜவாஹிருல்லா மீது பாய்ந்துட்டாரே நாராயணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இஸ்லாமியர்களையும், கிறிஸ்துவர்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று சொன்னதற்காக சீமானை விமர்சித்த மமக தலைவர் ஜவாஹிருல்லாவை நாராயணன் திருப்பதி சாடி இருப்பதன் மூலம் நாம் தமிழருக்கு பாஜக ஆதரவளிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் சாத்தானின் பிள்ளைகளாக மாறிவிட்டதாக சாடினார். சீமானின் இந்த கருத்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

BJP Narayanan condemn Jawahirulla for condemning Seeman in Muslim, Christians issue

அவர் வெளியிட்ட அறிக்கையில், "மணிப்பூர் வன்முறை வெறியாட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசும் பொழுது கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் இழிவாகப் பேசியிருப்பதும் வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள் மீது அமிலம் வீசுமாறு வன்முறையை தூண்டும் வகையில் உரையாற்றியிருப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திமுகவுக்கும் காங்கிரசுக்கும் தொடர்ந்து வாக்களித்து வருவதால் "முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகளாய் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மாறிவிட்டார்கள்" என்று சீமான் பேசியுள்ளார். இந்த கயமைத்தனமான பேச்சு வன்மையான கண்டனத்துக்கு உரியது.

தன் கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினாலேயே கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று வர்ணிப்பது அநாகரிகமானது, அருவருப்பானது, என்பதோடு அரசியல் நேர்மையற்ற செயலுமாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம். மணிப்பூரில் நடக்கின்ற வன்முறைகளுக்கு யார் காரணமோ..?

BJP Narayanan condemn Jawahirulla for condemning Seeman in Muslim, Christians issue

யார் மௌனமாக இருந்து வன்முறைகளை ஆதரிக்கிறார்களோ.? அவர்கள் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் தங்களுடைய தாக்குதல் இலக்காக வைத்திருக்கும் பொழுது, சீமானுக்கும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தான் தாக்குதல் இலக்குகளாக இருக்கிறார்கள்.
இதுவே இவர் யாருக்காக பேசுகிறார், யாருடைய நலனுக்காக செயல்படுகிறார் என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறது.

இத்தகைய குழப்பவாதங்களை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். சாத்தானின் பிள்ளைகள் என்ற கடுமையான,அருவருப்பான வார்த்தையை கிறிஸ்தவர்களுக்கு முஸ்லிம்களுக்கும் எதிராக பயன்படுத்தி உள்ள சீமான் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.

முன்பு தாய் மதத்திற்கு திரும்புங்கள் என சங்கப்பரிவார் தொண்டர் போல் பேசியவர் சீமான். தற்போதைய அவரது சிறுபான்மை வெறுப்பு பரப்புரை மூலம் தன்னை வெளிப்படையாகவே அம்பலப்படுத்தி கொண்டுள்ளார். இத்தகைய வேடாதாரிகளிடம் தமிழக மக்கள் எச்சரிகையாகவே இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்." என்று தெரிவித்தார்.

இதை தொடர்ந்து நடிகர் ராஜ்கிரண், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், வன்னியரசு உள்ளிட்ட பலரும் சீமானின் பேச்சை கண்டித்து பேசினர். மேலும் அவர் ஆர்.எஸ்.எஸ். பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் பலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.

BJP Narayanan condemn Jawahirulla for condemning Seeman in Muslim, Christians issue

இந்த நிலையில் பாஜக மாநில துணை தலைவர் சீமானை விமர்சித்து ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி அவரை சாடி உள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் தமிழ்நாட்டில் இருப்பது மாதிரி சாத்தானுடைய அரங்கு கிடையாது.

ஏன் தமிழ்நாட்டை குறிவைத்து சாத்தான் ஸ்டாக் பண்ணியிருக்கிறான்?" என்று தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை சாத்தானுடைய அரங்கு என்றும் ஹிந்து கடவுள்களை சாத்தான் என்றும் மோகன் சி லாசரஸ் குறிப்பிட்ட போது இதே ஜவாஹிருல்லா எங்கு போயிருந்தார்? தொடர்ந்து ஹிந்து கடவுள்களை சாத்தான் என்று பல்வேறு இஸ்லாமிய பேச்சாளர்கள் பேசும் போதேல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார் ஜவாஹிருல்லா?

ஹிந்து கடவுள்களை சாத்தான் என்று வர்ணிப்பது நாகரீகமானதா? அருவருப்பானது இல்லையா? ஹிந்து கடவுள்களை விமர்சித்த போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு இப்போது கண்டிப்பது தானே நியாயமற்ற, நேர்மையற்ற செயலாகும்!" என்று கேள்வி எழுப்பியுள்ளார். நாராயணனின் இந்த ட்வீட்டை வைத்து வைத்து சீமானுக்கு பாஜக ஆதரவளிப்பதாக பலர் விமர்சித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+