“விளைவு”.. ஊடகங்களுக்கு பாஜக நாராயணன் வார்னிங்.. “இனி இப்படி நடக்கக்கூடாது!” விவாதங்கள் பற்றி சாடல்
சென்னை: ஊடக விவாதங்களில் பாஜகவினர் பங்கேற்காமல் தவிர்த்து வந்த நிலையில், தங்கள் கட்சிக்கு எதிராக பேசுபவர்களை தொலைக்காட்சி நிர்வாகங்கள், நெறியாளர்கள் தொடர்ந்து பேச வைத்தால், விளைவுகள் ஏற்படும் என அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் நாராயணன் எச்சரித்து உள்ளார்.
தமிழ்நாடு பாஜக சார்பில் ஊடக விவாதங்களில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அக்கட்சி அறிவித்தது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பான மாநில நிர்வாகிகளின் பெயர் பட்டியலை அறிவித்தார். "தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் ஊடக பிரிவின் மாநில பார்வையாளராகவும், ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பிற்கான ஒருங்கிணைப்பாளராகவும் நியமனம் செய்யப்படுகிறார்.

மேலும் ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பிற்கான மாநில நிர்வாகிகள் பெயர் பட்டியல் இத்துடன் அறிவிக்கப்படுகிறது." என்று குறிப்பிட்டு பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திர, வானதி சீனிவாசன் உள்ளிட்ட 30 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டார். இந்த நிலையில் தமிழ்நாடு மாநில பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.
அதில், "கடந்த இரு ஆண்டுகளாக தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் பாஜகவினர் பங்கேற்காது தவிர்த்து வந்தோம். விவாதங்களில் பாஜகவினருக்கு உரிய நேரம் (Space) கொடுக்க ஊடகங்கள் மறுத்து வந்த நிலையில், நடு நிலையான விவாதங்கள் நடைபெற வாய்ப்பில்லை என்பதோடு, பாஜகவின் மீதான வெறுப்பை உமிழ்வதையே தொழிலாக கொண்டுள்ள 'ஒரு சில' ஊடகங்களும், ஒரு சில ஊடகவியலாளர்களும் மீண்டும் தங்களின் பாஜக வெறுப்பு பணியினை தொடர்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஒரு சில பங்கேற்பாளர்கள் பாஜகவினரை ஒருமையில் பேசுவதையும், பிரதமரை தரக்குறைவாக பேசுவதையும், எங்கள் மாநில தலைவரை அவதூறாக பேசுவதையும், அரசியலமைப்பு சட்டத்தின் படி பதவி வகிக்கும் ஆளுநரை அவமானப்படுத்துவதையும் இடையீட்டாளர்கள் (Moderators) கண்டிக்காமல் அமைதி காப்பதோடு அந்த நபர்களையே மீண்டும் மீண்டும் விவாதங்களுக்கு அழைத்து ஊக்குவிப்பது முறையற்ற செயல். மேலும், ஒரு விவாத தலைப்பின் கீழ் பாஜகவுக்கு எதிராக நான்கு பேரை பேச வைத்து அந்த கருத்துக்களே பெரும்பான்மையாக நிகழ்ச்சியில் பேசப்பட வேண்டும் என திட்டமிட்டு செயல்படுவது சில ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட வெறுப்பை, ஒரு சார்பு நிலைப்பாட்டை உணர்த்துகிறது.
கண்ணியமற்று பேசுபவர்களை சில தொலைக்காட்சி நிர்வாகங்கள் தொடர்ந்து விவாத நிகழ்ச்சிகளில் பேச வைத்து, பரபரப்புக்காக, வியாபாரத்திற்காக ஊடக தர்மத்தை காற்றில் பறக்க விடுவது வாடிக்கையாகி வருகிறது. ஏதோ, மற்றவர்களுக்கு மட்டும் தான் தரக்குறைவாக பேசத் தெரியும் என்று எண்ணிக்கொண்டிருந்தால் அது தவறு. நன்னடத்தை, கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அமைதி காக்கிறார்கள் பாஜகவினர். இனியும், இது தொடரக்கூடாது. தொடர்ந்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு இடையீட்டாளர்களும், தொலைக்காட்சி நிர்வாகங்களுமே பொறுப்பு." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications