சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசத்தை விமர்சித்தீரே.. "பிஷப்பை" எதிர்க்க துணிவிருக்கா? பாஜக பொளேர்

Google Oneindia Tamil News

சென்னை: தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசத்தை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின், எம்பி திருமாவளவனுக்கு பிஷப்பை பல்லக்கில் தூக்குதலை பிற்போக்குத்தனம் என கூற துணிவுள்ளதா என பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீன மடம் செயல்பட்டு வருகிறது. பழமையான சைவ ஆதீனமாக விளங்கும் இந்த ஆதீனத்தின் 27ஆவது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 2019ஆம் ஆண்டு பதவியேற்றார்.

கடந்த 2019இல் தருமபுரத்தில் மனிதனை மனிதர்களே தூக்கும் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கான ஏற்பாடு நடத்தப்பட்டது. வெள்ளி பல்லக்கில் புதிய ஆதீனம் அமர்ந்து வீதி உலா வந்தார்.

மனிதனை மனிதனே தூக்கும் பல்லக்கு நிகழ்ச்சி

இந்த நிலையில் மனிதனை மனிதர்களே தூக்கும் பட்டினப்பிரவேசத்திற்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் மடத்தில் இந்த மாத இறுதியில் மே 22 ஆம் தேதி பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை.. திராவிடர் கழகம் எதிர்த்த நிலையில் அரசு அதிரடி தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை.. திராவிடர் கழகம் எதிர்த்த நிலையில் அரசு அதிரடி

மனிதனை மனிதனே தூக்கும் பல்லக்கு நிகழ்ச்சி

மனிதனை மனிதனே தூக்கும் பல்லக்கு நிகழ்ச்சி

இந்த நிலையில் மனிதனை மனிதர்களே தூக்கும் பட்டினப்பிரவேசத்திற்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் மடத்தில் இந்த மாத இறுதியில் மே 22 ஆம் தேதி பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

 தடை

தடை

திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில், ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் பல்லக்கை தோளில் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ. பாலாஜி மே 2 ஆம் தேதி உத்தரவிட்டார்.

சர்ச்சையானது

சர்ச்சையானது

இந்த நிலையில் மதுரை ஆதீன கர்த்தர் ஆதீனகர்த்தகார ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கண்டனம் தெரிவித்ததோடு எங்கள் உயிரைக் கொடுத்தாவது பட்டினப்பிரவேசத்தை நடத்துவோம் என கூறியதால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. குருவுக்கு சிஷ்யர்கள் செய்யும் மரியாதை என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்தியே காட்டுவோம் என ஆதீனங்கள் இருக்கும் நிலையில் தமிழக அரசோ அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

Recommended Video

    கொதித்தெழுந்த Mannargudi Jeeyar | Pattina Pravesam Issue | Dharmapuram Adheenam | Oneindia Tamil
    பாஜக கேள்வி

    பாஜக கேள்வி

    இந்த நிலையில் வெளிநாட்டில் பிஷப்பை பல்லக்கில் சுமப்பது குறித்த புகைப்படத்தை வெளியிட்டு பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி கூறுகையில் தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசத்தை விமர்சித்த @mkstalin @thirumaofficial போன்றோருக்கு இதை பிற்போக்குத்தனம் என்று கூற துணிவுள்ளதா? பல்லக்கு தூக்குபவர்களை அடிமைகள் என்று விமர்சிப்பார்களா? கலாச்சார சீர்கேட்டை நோக்கியே இவர்களின் ஹிந்து விரோத சிந்தனை. அனைத்தும் ஓட்டுக்காக! பதவிக்காக! என கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் பிஷப்பை மற்ற மனிதர்கள் தூக்கும் நிலை எப்போதோ முடிவுக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    BJP Narayanan Thirupathy asks about Bishop's Palanquin by people in his tweet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X