திராவிட மாடல் அரசால் தமிழர்களுக்கு எத்தனை பெரிய அநீதி தெரியுமா? கொந்தளிக்கும் பாஜக நிர்வாகி
சென்னை: அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் நடைபெறும் அதே நாளில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங்கும் நடத்துவது தவறானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாஜக நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிக எண்ணிக்கையில் தமிழக மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கான அனுமதி கிடைக்கவுள்ள நிலையில், அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் நடைபெறும் அதே நாளில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங்கும் நடத்துவது தவறானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங்கிற்கு பின்னர் மாநில கவுன்சிலிங் நடைபெற்றால் மேலும் நூற்றுக்கும் அதிகமான தமிழக மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் அனுமதிக்கப்படுவார்கள். அகில இந்திய கவுன்சிலிங் நடைபெறும் அதே நேரத்தில் மாநில கவுன்சிலிங் நடைபெற்றால், அகில இந்திய கவுன்சிலிங்குக்கு தமிழ் மாணவர்கள் விண்ணப்பிக்க மாட்டார்கள்.
அதனால், தமிழக மாணவர்களுக்கு கிடைக்க கூடிய மருத்துவ படிப்புக்கான வாய்ப்பு பிற மாநில மாணவர்களை சென்றடையும். மற்ற மாநிலங்கள் இதை பின்பற்றும் போது, தமிழகம் மட்டும் அதே நாளில் நடத்துவது ஏன்? நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்கள் மருத்துவ படிப்பை மேற்கொள்வதை திமுக அரசு தடுப்பது ஏன்? திமுகவின் தமிழர் விரோத போக்கு ஏன்? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications