Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூணூலை அறுப்பேன் என்று பேசிய சுப.வீரபாண்டியனை கைது செய்வாரா முதல்வர்? - கொந்தளித்த பாஜக நாராயணன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : குறிப்பிட்ட சாதியினரை அவதூறு செய்து, மிரட்டல் விடுத்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ள சுப.வீரபாண்டியனை கைது செய்ய தமிழக காவல்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிடுவாரா என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

பத்ரி சேஷாத்ரி, அறிஞர் அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவு செய்தது கடும் கண்டனங்களைக் கிளப்பிய நிலையில், அவர் தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சுப.வீரபாண்டியன் பத்ரி சேஷாத்ரிக்கு கண்டனம் தெரிவித்துப் பேசுகையில், அவர் சார்ந்துள்ள சாதியினரை மிரட்டும் வகையில் பேசியதாக பாஜக நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினரான பிராமணர்களை மிரட்டும் வகையில் பேசிய சுப.வீரபாண்டியன் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பத்ரி சேஷாத்ரி நீக்கம்

பத்ரி சேஷாத்ரி நீக்கம்

முன்னாள் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணாவை ட்விட்டரில் தரக்குறைவாக விமர்சித்த கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரியை, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவில் இருந்து நீக்கவேண்டும் என திமுகவினர் பலரும் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனைக் குழுவில் இருந்து பத்ரி சேஷாத்ரி நீக்கப்பட்டு, அக்குழுவை தமிழக அரசு மாற்றி அமைத்தது. எனினும், திமுக எம்.பிக்கள் vs பத்ரி சேஷாத்ரி கருத்துகள் என சமூக வலைதளத்தில் அனல் பறந்தது.

சுப.வீ கொதிப்பு

சுப.வீ கொதிப்பு

இந்நிலையில், திமுக மேடை ஒன்றில் பேசிய திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், பத்ரி சேஷாத்ரியின் கருத்தைக் கண்டித்திருந்தார். தமிழகத்தில் ஒருபோதும் ஆரிய மாடலை நுழையவிடமாட்டோம், அண்ணா, கருணாநிதி பற்றி எவன் ஒருவன் தவறாக பேசினாலும் மரியாதை கொடுக்க முடியாது எனப் பேசியிருந்தார் சுப.வீரபாண்டியன். பத்ரி சேஷாத்ரியை விமர்சிக்க சாதியை இழுத்து மிரட்டல் விடுத்துள்ள சுப.வீரபாண்டியனை கைது செய்வாரா முதல்வர் என பாஜக நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

 உங்களுக்கு உரிமை உண்டு

உங்களுக்கு உரிமை உண்டு

இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பத்ரி சேஷாத்திரியை அரசு பொறுப்பில் நியமிப்பதும், நீக்குவதும் அரசின் உரிமை. அவர் யாரையாவது அநாகரீகமாகவோ, தரக்குறைவாகவோ பேசியிருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரமும், கடமையும் உள்ளது. நேரு, இந்திரா காந்தி, இராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எண்ணற்ற தலைவர்களை அச்சில் ஏற்ற முடியாத தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்த கூட்டம் தான் இந்த திராவிடர் கழக கூட்டம்.

பிராமண சமுதாயத்தை இழிவாக

பிராமண சமுதாயத்தை இழிவாக

அதே போல், தற்போதும் ஹிந்து மத கடவுள்களை, மத நம்பிக்கைகளை அநாகரீகமாக, தரக்குறைவாக, இழிவாக பேசிய, பேசிக்கொண்டிருக்கின்ற திராவிடர் கழக மற்றும் அதன் தோழமை கும்பல் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உள்ளது. ஆனால், பத்ரி சேஷாத்ரியை கண்டிக்கும் போர்வையில், திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் சுப.வீரபாண்டியன், பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளதோடு, பூணூலை கத்தரித்து விடுவோம் என்று மிரட்டும் தொனியில் பேசியிருப்பது சிறுபான்மை சமூகமான பிராமண சமூகத்திற்கு விடப்பட்டு இருக்கும் அப்பட்டமான மிரட்டல்.

பிராமணர்கள் திருப்பி தாக்கமாட்டார்கள்

பிராமணர்கள் திருப்பி தாக்கமாட்டார்கள்

பத்ரி சேஷாத்ரி என்ற தனிநபரை விமர்சனம் செய்ய வேண்டுமென்றால் செய்து கொள்ளட்டும், ஆனால், இது போன்று தனிநபர் தொடர்புடைய விவகாரங்களில் வேறு எந்த சமூகத்தையாவது ஒட்டுமொத்தமாக இழித்தும், பழித்தும் பேசுவதற்கு சுப.வீரபாண்டியன் போன்ற 'கோழைகளுக்கு' தைரியம் உள்ளதா? பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்கள் திருப்பி தாக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் இது போன்ற வன்மம் மிகுந்த தரக்குறைவான, மலிவான சாதிய விமர்சனங்களை இந்த 'கோழைகள்' முன்வைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

 ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா?

ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா?

பத்ரி சேஷாதிரி தவறு செய்திருந்தால், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர் மீது நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால், ஒட்டுமொத்தமாக ஒரு சாதியை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ள, மிரட்டியுள்ள சுப. வீரபாண்டியன் மீது நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்? பூணூலை அறுப்பேன் என்று பேசிய சுப.வீரபாண்டியனை, இது அனைவருக்குமான ஆட்சி என்று பெருமிதம் கொள்கிற முதலமைச்சர், அதன்படி நடந்து கொள்வாரா?

 நேர்மையான ஆட்சி நடக்குமா?

நேர்மையான ஆட்சி நடக்குமா?

மத துவேஷங்களை செய்பவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என சட்டசபையில் உறுதி கொடுத்த முதலமைச்சர் ஒரு குறிப்பிட்ட சாதியினரை அவதூறு செய்து, மிரட்டல் விடுத்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ள சுப.வீரபாண்டியனை கைது செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடுவாரா? நேர்மையான ஆட்சி நடத்துவதாக சொல்லிக்கொள்வதை உறுதி செய்வாரா? நியாயமாக நடந்து கொள்வாரா?" என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+