யார் தியாகி? செந்தில் பாலாஜியா? இந்த நூற்றாண்டின் சிறந்த காமெடியே இதுதான்! பாயிண்டோடு வந்த பாஜக!
சென்னை : அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளிவந்திருக்கும் நிலையில், அவரை வரவேற்று எக்ஸ் பதிவிட்டிருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்நிலையில் நடத்துனர், மெக்கானிக் பணிக்கு லஞ்சம் வாங்கியதாக சுட்டிக்காட்டிய ஒரு நபரை தியாக சீலராக்கியது இந்த நூற்றாண்டின் மிக பெரிய காமெடி என பாஜக நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சுமார் 450 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவரை வரவேற்கும் விதமாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதில்,"ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது.
அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!" என பதிவிட்டிருந்தார்.
நடத்துனர், மெக்கானிக் பணிக்கு லஞ்சம் வாங்கியதாக சுட்டிக்காட்டிய ஒரு நபரை, முதல்வர் ஸ்டாலின் தியாக சீலராக்கியது இந்த நூற்றாண்டின் மிக பெரிய காமெடி என பாஜக நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை ட்வீட் இது தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, யார் தியாகி? செந்தில் பாலாஜியா? செந்தில் பாலாஜி கெட்ட கேட்டுக்கு முதலமைச்சர் பதவிக்கு இவர் பெயரும் இருந்தது என்று நீங்கள் சொன்னீர்களா இல்லையா மு.க.ஸ்டாலின் அவர்களே? செந்தில் பாலாஜியின் தம்பி கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது, லஞ்சம் வாங்குவது என கரூரை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்று நீங்கள் குற்றம் சாட்டியது மறந்து விட்டதா?
செந்தில் பாலாஜி மீது ஆள்கடத்தல், நிலஅபகரிப்பு புகார்கள் கூறியது உண்மையா இல்லையா? பேருந்துகளுக்காக வாங்கிய கருவியில் செந்தில் பாலாஜி ஊழல் செய்திருப்பதாக சட்ட மன்றத்தில்ஆதாரத்துடன் நீங்கள் பேசியதாக சொன்னது உண்மையா இல்லையா? பொறியியல் படித்து கொண்டிருந்த கோகுல் என்பவரை கடத்தி, கொலை மிரட்டல் செய்து, அவரின் சொத்துக்களை பறிமுதல் செய்ததோடு, அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்று செந்தில் பாலாஜி மீதான உங்களின் கடுமையான குற்றச்சாட்டை மறந்து விட்டீர்களா மு.க.ஸ்டாலின் அவர்களே?
அரசு கேபிள் டிவியில் கரூரில் பினாமிகளை வைத்து நடத்துவது செந்தில் பாலாஜி என்று நீங்கள் சொன்னது தவறா மு.க.ஸ்டாலின் அவர்களே? போக்குவரத்து துறையில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது, நடத்துனர் பணிக்கு 3 லட்சம், மெக்கானிக் பணிக்கு 6 லட்சம் என்று கொடுத்து ஏமாந்தவர்கள் லட்சக்கணக்கானோர் என்று நீங்கள் சொன்னது உண்மையா இல்லையா மு.க.ஸ்டாலின் அவர்களே? ஆள் கடத்தல் புகார் உள்ள நபருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று நீங்கள் சொன்னதை மறந்து விட்டீர்களா மு.க.ஸ்டாலின் அவர்களே?
செய்வதையெல்லாம் செய்து விட்டு, சொல்வதையெல்லாம் சொல்லிவிட்டு ஆள் கடத்தல் புகாருக்கு ஆளான ஒரு நபரை, கொலை மிரட்டல் விடுத்ததாக நீங்கள் சொன்ன ஒரு நபரை, பினாமிகளை வைத்து அரசு கேபிள் நடத்துவதாக நீங்கள் குற்றச்சாட்டு கூறிய நபரை, நடத்துனர், மெக்கானிக் பணிக்கு லஞ்சம் வாங்கியதாக நீங்கள் சுட்டிக்காட்டிய ஒரு நபரை, நில மோசடி செய்ததாக நீங்கள் கூறிய நபரை உங்கள் ஆருயிர் சகோதரராக மாற்றிக் கொண்டு, அவரை தியாக சீலராக்கியது இந்த நூற்றாண்டின் மிக பெரிய காமெடி! ஓ!!! இது தான் திராவிட மாடலோ?" என பதிவிட்டுள்ளார்.
-
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தாரா? உண்மைக்கு மாறானது.. வைரமுத்து -
சிபிஎஸ்இ-யில் அறிமுகமாகும் மும்மொழி கொள்கை.. ஸ்டாலின் எதிர்ப்புக்கு மத்திய கல்வி அமைச்சர் கொடுத்த பதில் -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம்










Click it and Unblock the Notifications