சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித் ஷா சென்னை வருகை.. பாஜக நிர்வாகிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை!

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னை வந்தார்.

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னை வந்தார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய முழுக்க அரசியல் கட்சிகள் பரபர ஆலோசனை நடத்தி வருகிறது. திமுக, காங்கிரஸ், பாஜக ஆகியவை இப்போதே கூட்டணிக்கு ஆலோசனை செய்து வருகிறது.

தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கடந்த டிசம்பர் மாதம் சென்னை வருவதாக இருந்தது. ஆனால் இந்த பயணம் ரத்தானது. அதே மாதம் இன்னொரு முறையும் பயணம் திட்டமிடப்பட்டு, பின் ரத்து செய்யப்பட்டது.

BJP national chief Amit Shah comes to Chennai

இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவருக்கு வரவேற்பு அளித்தார்.

பாஜக நிர்வாகிகள் அமித் ஷாவை வரவேற்கும் போது உடன் இருந்தனர். இன்று காலை பாஜக நிர்வாகிகளுடன் சென்னை பாஜக அலுவலகத்தில் முக்கிய சந்திப்பு ஒன்று நடக்க உள்ளது. தேர்தல் பணிகளை எப்படி செய்ய வேண்டும் என்று இவர்கள் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும் இதில் பேச வாய்ப்பு உள்ளது. இதில் பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

அதன்பின் சென்னை - உத்தண்டியில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ்.,அமைப்பின் நிகழ்ச்சியில் அமித் ஷா கலந்து கொள்ள உள்ளார்.

English summary
BJP national chief Amit Shah comes to Chennai to discuss on 2019 lok sabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X