அதிமுகவுடன், பாஜக கூட்டணி வைத்திருந்தால் திமுக 40 தொகுதிகளில் ஜெயித்திருக்காது.. எதிர்டோனில் தமிழிசை
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தால் திமுக 40 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்காது என்பது உண்மை தான் என்றும், 2026 சட்டசபை தேர்தலிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி கிடையாது என்று அண்ணாமலை சொல்லியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது லோக்சபா தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தால் திமுக 40 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்காது என்று அதிமுகவினர் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

இது உண்மை தானே.. எதார்த்தமான உண்மை. இன்றைக்கு அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் திமுக கூட்டணி 40 லும் வெற்றி பெற்றிருக்காது என்பது கணக்கு ரீதியாக உண்மை. மேலும் கூட்டணி என்பது அரசியல் வியூகம். இந்த வியூகத்தை எதிர்க்கட்சியாக தமிழகத்தில் பயன்படுத்தியிருக்காங்க.. தேசிய அளவிலும் பயன்படுத்தியிருக்காங்க.. அதனால் இது எதார்த்தமான உண்மை தான். இதை ஒத்துக்கொண்டு தான் ஆகவேண்டும்.
2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என்பதை நான் முடிவு செய்ய முடியாது. தேசிய தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள். இதற்கு இன்னும் 2 வருஷம் இருக்கு இப்போது ஏன்? காலம் வரும் போது பார்த்துக்கொள்ளலாம். இந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இருந்தால் திமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றிருக்காது என்பதை உறுதியாக சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது செய்தியாளர்கள் 2026 இல் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என அண்ணாமலை பேசியிருப்பது பற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பேசிய தமிழிசை, அண்ணாமலை அப்படி கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. இன்னும் காலம் நிறைய இருக்கிறது. எனவே கூட்டணியை பற்றி இப்போது பேசமாட்டோம். எங்கள் உழைப்பை பற்றி தான் பேசுவோம்.
வியூகத்தை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம். திமுக அவர்களது நல்லாட்சியினால் இங்கு இப்போது வெற்றி பெறவில்லை. இங்கே உள்ள வாக்குகள் பிரிந்ததனால் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கடந்த தேர்தலை விட அவர்கள் 7 சதவீத வாக்குகளை இழந்து இருக்கிறார்கள்" என்றார்.
முன்னதாக அண்ணாமலை பேசுகையில், 2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்காது என்று கூறினார். இந்த நிலையில் தான் தமிழிசை சவுந்தரராஜன் அண்ணாமலை கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றும், இந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டிருந்தால் திமுக இத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்காது என்று கூறியுள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications