ரஜினிகாந்த் ஒன்னை காட்டினா.. எச்.ராஜா இன்னொன்றை கேட்கிறாரே.. அரசியல் இப்படியாகி போச்சே!
Recommended Video
சென்னை: "திக வினர் ஒரிஜினலை காட்ட சொல்கின்றனர். முதலில் நீங்கள் முரசொலி இட மூலப்பத்திரத்தை காட்டுங்கள்" என்று ரஜினிக்காக திரும்பவும் முட்டுக் கொடுத்து ட்வீட் போட்டுள்ளார் எச்.ராஜா!
"பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.. செருப்பு மாலை போடப்பட்டது.." என்ற ரஜினியின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு அன்றைய தினமே கிளம்பியது.
போலீசிலும் திகவினர் புகார் அளிக்கவும் முயன்றனர்.. அப்போதுதான் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா "ரஜினி எதுவும் தப்பா பேசிடவில்லை.. அவர் மேலோட்டமாக ஒரு சம்பவத்தை சொன்னார்.. அதற்கே போலீசில் புகார் அளிப்பதன் மூலம் அவரை திகவினர் மிரட்ட நினைக்கிறார்கள். ஆனால் அவர் எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டார்" என்று ரஜினிக்காக வரிந்து கட்டிக் கொண்டு வந்தார்.

நீங்களும் படிங்க
இன்றைய தினமும் ரஜினியின் செய்தியாளர் சந்திப்புக்கு எச்.ராஜா ஒரு ட்வீட் போட்டு ஆதரவு தெரிவித்துள்ளார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, நடந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்த அவுட்லுக் பத்திரிகையை செய்தியாளர்களிடம் தூக்கி காட்டி, இதோ ஆதாரம், நான் படிச்சேன், நீங்களும் படிங்க" என்று சொல்லி இருந்தார்.

விவாதம்
உண்மையிலேயே இந்த விஷயத்தை பொறுத்தவரை, செய்தியை அன்று வெளியிட்ட துக்ளக் பத்திரிகையைதான் இன்று ரஜினி காட்டி இருக்க வேண்டும்.. ஏனென்றால் துக்ளக் விழாவில்தான் இந்த விவாதத்தை கிளப்பியிருந்தார்.
|
எச்.ராஜா
ஆனால் இதை பற்றியெல்லாம் எதையுமே சொல்லாமல், அதை பற்றி கருத்தும் சொல்லாமல், மீண்டும் ரஜினியின் கருத்துக்கு ஆதரவு தந்துள்ளார் எச்.ராஜா.. இந்த ஆதரவும் நேரடியாக ரஜினிக்கு இல்லை.. திமுகவை தாக்கி, அதன்மூலம் ரஜினியின் கருத்துக்கு முட்டு கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக பதிவிட்ட ட்வீட்டில், "திரு. ரஜினிகாந்த் அவர்கள் பத்திரிகை செய்தியின் நகலைக் காட்டியதற்கு திக வினர் ஒரிஜினலை காட்டச் சொல்கின்றனர். முதலில் நீங்கள் முரசொலி இட மூலப்பத்திரத்தை காட்டுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

கேள்வி
முரசொலி மூலப்பத்திரத்துக்கும், ரஜினியின் பெரியார் விவகாரத்துக்கும் சம்பந்தமே இல்லாதபோது, திரும்பவும் திமுகவை சீண்டிவிட்டுள்ளார் எச்.ராஜா! இந்த ட்வீட்டுக்கு கீழே திமுகவுக்கும், திகவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு கமெண்ட்கள் வந்து விழுந்தபடியே உள்ளன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications