சீமானை கிட்ட பார்த்ததுமே "பாஜக" ராதாரவி ஒரே போடு.. "யோவ், இந்த சின்னமே உனக்காகத்தான்".. என்ன நடந்தது
: பாஜகவின் நடிகர் ராதாரவி, சீமானை புகழ்ந்து பேசிய வீடியோ வைரலாகிறது
சென்னை: பாஜகவின் நடிகர் ராதாரவி, சீமானை எக்கச்சக்கமாக புகழ்ந்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.. என்ன காரணம்?
Recommended Video
நடிகர் ராதாரவி போகாத கட்சியே இல்லை.. கிட்டத்தட்ட எல்லா கட்சியிலும் ஒரு ரவுண்டு அடித்து வந்துவிட்டார்.. இப்போது சமீபத்தில் ஐக்கியமாகி உள்ளது பாஜகவில்!
இவர் எந்த கட்சிக்கு போனாலும், சர்ச்சைகள் மட்டும் இவரை விடாமல் விரட்டிக் கொண்டே வரும்.. பாஜகவிலும் இதே நிலைமைதான்.

தேங்காய் மூடி
ஒரு மேடையில் ராதாரவி பேசும்போது, "சும்மா அரசியல்வாதி, அரசியல்வாதின்னு காரணம் சொல்கின்றனர். பாவம், அரசியல்வாதிகள்.. அரசியல்வாதிகள் படுகின்ற கஷ்டம் நமக்குதானே தெரியும்.. ராதாரவி கட்சி மாறிவிட்டார்.. பணம் வாங்கிவிட்டார்ன்னு சொல்றாங்க... போயும் போயும் பாஜக பணம் தருதுன்னு சொல்லலாமா? இந்த மேடையில் வெச்சே சொல்றேன், பாஜக பணம் தரும் கட்சியா? அது ஒரு தேங்காய் மூடி கட்சி" என்று பேசியிருந்தார்.. அதிலும் அந்த கட்சியில் சேர்ந்த புதிதிலேயே இப்படி பேசியிருந்தார்.

அக்யூஸ்டுங்க
கடந்த ஒரு மாதத்துக்கு முன்புகூட சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது.. அப்போது பேசிய ராதாரவி, "இந்தியாவிலேயே இரண்டு அக்யூஸ்டுங்க இருக்காங்க. ஒருவர் மோடிஜி , இன்னொருவர் அமித்ஷா" என்று தவறுதலாக பாஜகவினரை குழப்பியடித்தார்.. யார் கட்சியில் சேர்ந்தாலும், பெரிய பெரிய பொறுப்புகளை வாரி வழங்கும் பாஜக, ராதாரவிக்கு மட்டும் ஏனோ அப்படிப்பட்ட பதவிகள் ஏதும் தரவில்லை.. அரசியலுக்கே புதிதாக காலடி வைத்த காயத்ரி ரகுராமனுக்குகூட டக்டக்கென போஸ்டிங்குகளை அள்ளி தந்தது.. ஆனால், ராதாரவியை கண்டுகொள்ளவில்லை.

முகசுளிப்பு
ஆனால், இவரை பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தி கொண்டது.. அந்த பிரச்சாரங்களிலும், திமுக, கமல் உள்ளிட்ட தலைவர்கள் மீதான தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்து, பொதுமக்களின் முகசுளிப்புக்கு நேரடியாகவே ஆளானார் ராதாரவி.. இப்போது, சீமானை இவர் புகழ்ந்து பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. சென்னையில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில், சீமானும் பங்கேற்றார்.. ராதாரவிக்கு விருது தரப்பட்டது.. அப்போது விருதினை பெற்றுக் கொண்டு உரை நிகழ்த்தும்போது, சீமானை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார் ராதாரவி.

இங்கிலீஷ்
"நான் ஒரு வக்கீல்.. என்னால் சரளமாக இங்கிலீஷில் பேச முடியும்.. ஆங்கிலத்தில் பேசலாம்னு நினைச்சேன்.. ஒரு ஆளை ('சீமான்) முன்னாடி பார்த்தேன்.. ஐயயோ பேசவேக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.. எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை இங்கே தந்துள்ளார்கள்.. இதை வேற யார் யாரோ எனக்கு தந்திருக்க வேண்டியது.. ஆனால், இவர்கள் தருகிறார்கள் என்பதால்தான், இவர்களை தேடி நான் ஓடிவருகிறேன்.. இந்த விருதில் உள்ள சின்னத்தை பார்த்தீங்களா? அதுதான் என்னை இந்த விருதை பெற்றுக் கொள்ள ஒத்துக்கொள்ள வைத்தது..

ஷாக் ஆகிட்டேன்
அந்த சின்னம், சீமானின் சின்னம்.. வீட்டில்கூட, சீமானைப்போலவே, கையை இப்படி உயர்த்தி பிடிப்பதுபோல இந்த சின்னத்தை பிடித்துக் கொள்ளலாம்.. எப்போ கேட்டாலும் இதைதான் சொல்லுவேன்.. சீமான்கிட்டயும், "யோவ் உனக்காகத்தான், உன் ஞாபகமாகத்தான் இந்த விருதை வெச்சிருக்கேன் பாரு என்று சொல்வேன்.. சீமான் ஒரு அற்புதமான மனிதர்.. நான் இங்கே சீமானை பார்த்ததுமே ஷாக் ஆயிட்டேன்.. இந்த மாதிரி நிகழ்ச்சிக்கெல்லாம் அவர் வருகிறாரே, பரவாயில்லையே என்று ஆச்சரியம் வந்தது" என்றார்..

பாஜக + B டீம்
ராதாரவி இப்படி சொல்லச் சொல்ல சீமான் அதைக் கேட்டு சிரித்து கொண்டே இருந்தார்.. இருந்தாலும் இதை எப்படி எடுத்துக் கொள்வது? ஏற்கனவே சீமானுக்கு பாஜகவின் "பி டீம்" என்ற மறைமுக பெயர் உள்ளது.. போதாக்குறைக்கு பாஜகவின் ராதாரவி புகழ்ந்துள்ளது கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.. இன்னொன்று, இருவருமே சினிமா துறை என்பதால், இப்படி மனம்விட்டு பாராட்டியதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.. அல்லது, இருவரும் மாற்று கட்சி என்றாலும், பாராட்டு தெரிவித்து, அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்திக் கொண்டதாகவும் இருக்கலாம்..!











Click it and Unblock the Notifications