Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூட்டணிக்கு யாரையும் இழுக்கவில்லை.. கடைசி நேரத்தில் எதுவும் மாறலாம்.. 400 சீட் உறுதி.. அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜகவின் கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கூட்டணி கதவுகள் திறந்துள்ளது என்று அமித்ஷா கூறியுள்ளதற்கு அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 15 பேர் பாஜகவில் இணைந்தனர். இந்த இணைப்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அதிமுக என குறிப்பிட்டு அமித்ஷா அழைப்பு விடுக்கவில்லை என்றார். தேசிய ஜனநாயகக் கூட்டணியை தொடங்கியது பாஜகதான். அந்த கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம். திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் கூட இணையலாம்.

BJP opened the alliance door Annamalai said that anything can change at the last minute

கடந்த 2014, 2019 லோக்சபா தேர்தல் போல இந்த தேர்தல் கிடையாது. தேசிய ஜனநாயக் கூட்டணி 400 தொகுதிகளி வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளது பாஜக மட்டுமே 350 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். இப்போது பிப்ரவரி மாதம்தான் இன்னும் நாட்கள் உள்ளன. பாஜக கூட்டணியில் யார் யார் இணைவார் என்று இன்னும் சில நாட்களில் தெரியவரும். இம்மாத இறுதிக்குள் தெளிவான முடிவு கிடைக்கும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கடைசி நேரத்தில்கூட கூட்டணி முடிவுகள் மாறலாம் அனைத்து கட்சிகளுக்கும் கூட்டணி கதவு திறந்திருப்பதாகவே அமித்ஷா கூறியுள்ளார். அதிமுக என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார். மோடி மற்றும் பாஜக தலைமையை ஏற்கும் கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலுக்கு பாஜக முழு வீச்சில் தயாராகி வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க பாஜகவில் வேட்பாளர்களை தயார் செய்ய ஆரம்பித்து விட்டது பாஜக. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விலகியது. இதனையடுத்து மீண்டும் அதிமுகவை தங்கள் அணிக்கு கொண்டு வர பாஜக பல கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

யாரெல்லாம் பிரதமர் நரேந்திர மோடியை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களெல்லாம் பாஜக கூட்டணியில் சேரலாம் என்று கூறியுள்ளார் அண்ணாமலை. அதே நேரத்தில் அதிமுக தங்களது முடிவில் உறுதியாக இருந்து வருகிறது. இதனிடைய தற்போது பாஜக தங்கள் கூட்டணியை வலுப்படுத்த பாமக, தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளிதழ் ஒன்றுக்கு தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அதில், பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழ்நாடு நாட்டின் முக்கியமான மாநிலம், அதற்கென தேர்தல் அறிக்கையில் நிறைய விஷயங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி முறிந்து விட்டது, 3வது அணி அமைக்க திட்டமா.? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமித்ஷா, கூட்டணிக்காக எல்லா கதவுகளும் திறந்துள்ளது. இது குறித்து ஆலோசித்து வருவதாக பதில் அளித்தார்.

அமித்ஷாவின் பேச்சு தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாஜக உடன் கூட்டணி தொடர்பாக ஜி.கே. வாசன் பேசி வருகிறார். அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று உறுதியாக கூறி வருகின்றனர். ஜெயக்குமாரும் இன்றைய தினம் உறுதியாகவே கூறி விட்டார். பாஜகவின் கதவு திறந்திருந்தாலும் அதிமுகவின் கதவு சாத்தப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார் ஜெயக்குமார்.

இதனிடையே அதிமுகவிற்காக கூட்டணி கதவு திறந்திருக்கிறது என்று அமித்ஷா சொன்னதன் மூலம் பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்று கமெண்ட் செய்துள்ளார் திமுகவின் ஆர்.எஸ். பாரதி. இதனிடையே பாஜக உடன் கூட்டணி கிடையாது என்பதில் உறுதியாகவே இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இன்றைய தினம் செய்தியாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம், பாஜக கூட்டணி குறித்து அமித்ஷா கூறிய கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, அவர் என்ன கூறியுள்ளார் என்று நான் இன்னும் பார்க்கவில்லை என்று ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பாஜக கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+