ஸ்டாலினின் கொளத்தூர்தான் குறி.. மோடி பிறந்தநாளில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.. அதிரடி காட்டும் பாஜக
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் பாஜக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா பெரியளவில் கொண்டாடப்படவில்லை. இந்த நிலையில் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாள், நாளை விமரிசையாக கொண்டாட பாஜக திட்டமிட்டுள்ளது.
இதற்காக நாடு முழுவதும் 2 வாரங்கள் சேவை வாரமாக கொண்டாட பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது. இந்த இரண்டு வாரங்களில் விழிப்புணர்வு பேரணிகள், மாரத்தான் போட்டிகள், நலத்திட்ட உதவிகள் என பாஜக சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

தயாராகும் பாஜக
அதேபோல் தமிழக பாஜக சார்பாக நாளை மாரத்தான் போட்டி, கபடி போட்டி, மாட்டு வண்டி போட்டி, கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் மாவட்டந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று பாஜக மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.

தங்க மோதிரம்
இந்த நிலையில் சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் தனியார் மருத்துவமனையில் நாளை பிறக்கவுள்ள குழந்தைகளுக்கு தலா 2 கிராம் மோதிரம் வழங்க இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்த மருத்துவமனையில் நாளை 10 முதல் 15 குழந்தைகள் பிறக்கும் என எதிர்பார்ப்பதாகவும் பாஜகவினர் கூறுகின்றனர்.

கொளத்தூர் தொகுதி
அதேபோல் தமிழக பாஜக சார்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் அப்பகுதி மக்களுக்கு 720 கிலோ மீன் விநியோகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக பாஜகவினர் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், மோடி பிறந்த நாளில் ஸ்டாலின் கோட்டையான கொளத்தூர் தொகுதியை குறிவைத்து பாஜகவினர் களமிறங்கியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல்
ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாரத் ஜோடோ யாத்திரை மூலம் காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகுமாறு தொண்டர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். தேசிய அளவிலும் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு தலைவர்களை சந்தித்து வருகின்றனர். இதனால் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட பணியாக பாஜக திட்டமிட்டுள்ளது.
-
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications